ஆதரவு தந்த 2 விதர்பா எம்எல்ஏக்கள்.. உயர்ந்தது சிவசேனா பலம்.. கடும் குழப்பத்தில் மகாராஷ்டிர பாஜக!

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு சிறிய கட்சியை சேர்ந்த விதர்பா எம்எல்ஏக்கள் இரண்டு பேர் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு சிறிய கட்சியை சேர்ந்த விதர்பா எம்எல்ஏக்கள் இரண்டு பேர் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.

ஹரியானாவில் ஆட்சியை பிடித்துவிட்டாலும், மகாராஷ்டிராவில் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாத நிலையில் இருக்கிறது பாஜக கட்சி. அங்கு சிவசேனாவுடன் இணைந்து மாபெரும் வெற்றியை பாஜக பெற்றுள்ளது. ஆனாலும் சிவசேனாவின் கண்டிப்பான குணத்தால் பாஜக அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது.

பல நேரங்களில் நண்பனாகவும் சில நேரங்களில் எதிரியாகவும் இருக்கும் சிவசேனா, இந்த முறை எதிரியாக உருவெடுத்துள்ளது. முதல்வர் பதவி கொடுத்தே ஆக வேண்டும் என்று சிவசேனா கேட்டு வருகிறது.

பாஜக எத்தனை

பாஜக எத்தனை

மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.

எத்தனை

எத்தனை

அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. இந்த நிலையில் சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா தற்போது கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது.

வேண்டும்

வேண்டும்

தேர்தலுக்கு முன் நாங்கள் போட்டு இருந்த 50/50 ஒப்பந்தத்தை பாஜக மதிக்க வேண்டும் என்று சிவசேனா கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது. 5 வருடங்களில் இரண்டரை வருடம் பாஜக முதல்வரும், இரண்டரை வரும் ஆதித்யா தாக்கரே முதல்வராகவும் இருப்பார் என்று சிவசேனா கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் போடவும் கோரிக்கை வைத்துள்ளது.

கூடுதல்

கூடுதல்

இந்த நிலையில் விதர்பாவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் தற்போது சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர். பிரகார ஜனசக்தி பார்ட்டியை சேர்ந்த அச்சல்பூர் தொகுதி எம்எல்ஏ பச்சு காடு மற்றும் ராஜ்குமார் பட்டேல் ஆகியோர் சிவசேனாவிற்கு கடிதம் மூலம் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர்.

பலம் கூடிவிட்டது

பலம் கூடிவிட்டது

இதன் மூலம் சிவசேனாவின் பலம் 59 ஆக உயர்ந்துள்ளது. இதனால் எங்களின் பலம் அதிகரித்துள்ளது, ஆகவே பாஜக எங்கள் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும். கண்டிப்பாக 50/50 வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+