தவிர்க்க முடியாத காரணம்.. உத்தவ் பதவி ஏற்பு விழாவை தவிர்த்த சோனியா, ராகுல்.. வருத்தத்துடன் கடிதம்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற விழாவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சேர்ந்து 6 அமைச்சர்களும் மூன்று கட்சி சார்பாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த பதவி ஏற்பு விழாவிற்காக நேற்று சிவசேனா கட்சியின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே நாடு முழுக்க இருக்கும் மூத்த தலைவர்களை சென்று சந்தித்தார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களை சந்தித்து அவர் பேசினார்.

அழைப்பு
அதன்படி அவர் நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இன்று உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இயலாது என்று சோனியா, ராகுல் காந்தி தெரிவித்துள்ளனர்.

இல்லை
தனிப்பட்ட காரணங்களால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. மூன்று கட்சிகளும் மிக முக்கியமான கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து இருக்கிறது. இந்தியாவில் மோசமான சூழ்நிலை நிலவி வரும் சூழலில் இந்த கூட்டணி உருவாகி உள்ளது. இந்திய அரசியல் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது.

என்ன வாழ்த்து
மக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் நாட்டின் முக்கியமான மூன்று கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. இந்த கூட்டணி நீண்ட வருடங்களுக்கு நிலைத்து இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மக்கள் கோரிக்கை
மகாராஷ்டிரா மக்களின் கோரிக்கை அனைத்தும் இதன் மூலம் நிறைவேற்றப்படும். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நாங்கள் இணைந்து செயல்படுவோம். இன்று பதவி ஏற்கும் உத்தவ் தாக்கரேவிற்கும், மற்ற அமைச்சர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications