சரத் பவார் போட்டுக்கொடுத்த வழி.. ஸ்டாலின் சொன்ன 2 விஷயங்கள்.. மாபெரும் திட்டத்திற்கு தயார் ஆகிறாரா?
நேற்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய 2 விஷயங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது.
Recommended Video
மும்பை: நேற்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய 2 விஷயங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது இந்தியா எதிர்கட்சிகளை திரட்டவும் பணியில் அப்போதைய ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுப்பட்டு வந்தார். எல்லா மாநில கட்சிகளையும், பாஜகவிற்கு எதிரான கட்சிகளையும் அவர் ஒன்றாக இணைக்க முயன்று வந்தார்.
இதில் ஒரு வகையில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால் டெல்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் எல்லாம் அவரால் எல்லா எதிர்கட்சிகளையும் இணைக்க முடியவில்லை.

நல்ல மாடல்
இந்தியா முழுக்க பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறியுள்ளது. மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜகவால் மெஜாரிட்டி பெற முடியவில்லை என்றாலும், கூட லோக்சபா தேர்தலில் இப்போதும் பாஜகதான் கிங் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கிறது. அதிலும் பாஜகவின் சமீபத்திய திட்டங்கள் எல்லாம் அந்த கட்சிக்கு அதிக பலத்தை கொடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகள்
இந்த நிலையில்தான் பாஜகவின் வெற்றிகரமான கிராபில் மிகப்பெரிய சறுக்கலாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது. பல நாள் நண்பன் சிவசேனா இப்படி முதுகில் குத்திவிட்டு கூட்டணிவிட்டு வெளியேறும் என்று பாஜக கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அதிலும் அக்கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற பரம வைரிகளுடன் சேரும் என பாஜக நினைக்கவில்லை.

சரத் பவார்
இந்த அரசியல் திருப்பங்களுக்கு எல்லாம் முக்கிய காரணகர்த்தாவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பார்க்கப்படுகிறார். அவர்தான் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றாக இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமித் ஷாவிற்கு எதிரியாகி கேம் ஆடியது சரத் பவார்தான்.

ஸ்டாலின் இதை குறிப்பிட்டார்
இதை உத்தவ் தாக்கரேவின் பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினே 2 விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். மூன்று கட்சி தலைவர்களிடம் பேசிய ஸ்டாலின், எதிர்கட்சிகளை இணைத்து சரத் பவார் சாதனை படைத்துள்ளார். அவர் நமக்கெல்லாம் புதிய பாதையை போட்டு கொடுத்துள்ளார். சரத் பவாரின் பாதையை எதிர்க்கட்சிகள் நாடு முழுக்க பின்பற்ற வேண்டும்.

ஐடியா
பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதேபோல் இணைய வேண்டும். பாஜகவை எல்லோரும் சேர்த்து எதிர்த்தால் எளிதாக வெல்ல முடியும். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை மொத்த இந்திய அரசியலும் பின்பற்ற வேண்டும், என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

வேறு என்ன
அது மட்டுமின்றி உத்தவ் தாக்கரே மும்பையில் இருக்கும் பல லட்சம் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். மும்பை தமிழர்களின் பாதுகாப்பு & நலனுக்காக உத்தவ் பணியாற்ற வேண்டும். மும்பையில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். அவர் தன்னுடைய பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.

திட்டம்
மாநில சுயாட்சி மீது சிவசேனா கவனம் செலுத்தும் என நம்புகிறேன். மற்ற மாநிலங்களுடன் சிவசேனா ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் , என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். இதன் மூலம் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஸ்டாலின் திரட்ட முயன்று வருகிறார் என்று கூறுகிறார்கள்.

பெரிய கட்சி
தற்போது லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுகதான். அதனால் திமுக தேசிய அளவில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நேற்று உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவிலும் ஸ்டாலினுக்கு தனியாக மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்டாலினை சிவசேனா தனியாக கவனித்துக் கொண்டது.

ஸ்டாலின் கலந்து கொண்டார்
மமதா, சோனியா, ராகுல் போன்ற பலர் கலந்து கொள்ளாத நிகழ்ச்சியில் ஸ்டாலின் முக்கிய உறுப்பினராகி கவனம் பெற்றார். சிவசேனா உடன் ஸ்டாலின் இணக்கம் ஆகியுள்ளார். இதனால் ஸ்டாலின் பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகளை மட்டுமின்றி பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் இணைக்க திட்டமிடுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

வெளியேறி வருகிறது
நேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் இதைத்தான் குறிப்பிட்டார். என்டிஏவில் இருக்கும் மற்ற கட்சிகளும் சிவசேனா போல கூட்டணியில் இருந்து வெளியேறி எங்களுடன் இணைய வேண்டும் என்றார். இதனால் பாஜகவிற்கு எதிராக மீண்டும் ஸ்டாலின் - காங்கிரஸ் இணைந்து கட்சிகளை திரட்டுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஸ்டாலின் இதில் சரத் பவார் போல வெல்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடு போல தோல்வி அடைவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications