ஒருபக்கம் கணவர்.. இன்னொருபுறம் மாமனார்.. இடையே மாமியார் வேற.. இயற்கைக்கு மாறான உறவால் கதறிய தானே பெண்
மும்பை: இயற்கைக்கு மாறான உறவுக்கு கணவர் கட்டாயப்படுத்திய அதேவேளையில் மாமனாரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்துவதாகவும், மாமியார் நகைகளை அபகரிக்க முயன்றதாகவும் பெண் ஒருவர் அளித்த புகார் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீவண்டி பகுதியை சேர்ந்தவர் 28 வயது பெண். திருமணம் ஆனவர். இவரது கணவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. திருமணம் ஆன புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர். அதன்பிறகு அவர்கள் இடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரது கணவர் அந்த பெண்ணை இயற்கைக்கு மாறான உறவுக்கு வலுக்கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதாவது தாம்பத்தியத்துக்கு பெண் தயங்கும் நிலையிலும் அவரது கணவர் அவரை கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் தன்னுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவை வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். இதனை அந்த பெண் விரும்பவில்லை. கணவராக இருந்தாலும் கூட மனைவி அனுமதித்தால் மட்டுமே தாம்பத்தியம் கொள்வது தான் சரி என கூறும் நிலையில் அவர் எல்லை மீறியுள்ளார்.
இதனால் அந்த பெண் மனம் உடைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அவரது மாமனாரும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மருமகள் என்று பாராமல் அவரின் உடலை தவறான நோக்கத்தில் தொட்டு பேசுவது உள்ளிட்ட செயல்களில் மாமனார் ஈடுபட்டு வந்துள்ளார். இது அந்த பெண்ணால் சகித்து கொள்ள முடியவில்லை.
அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் கணவரின் தாய் (மாமியார்) உள்பட குடும்பத்தில் உள்ள 4 பெண்கள் நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். அதாவது திருமணத்தின்போது அந்த பெண் கொண்டு வந்த நகைகளை வாங்கி அவர்கள் பயன்படுத்த விரும்பினர். ஆனால் அந்த பெண் கொடுக்கவில்லை. இதனால் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கான பிரச்சனையை மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் அவர் தவித்துள்ளார். இதனால் மனம் வெறுத்த அந்த பெண் சம்பவம் தொடர்பாக போய்வாடாபோலீசில் புகார் செய்துள்ளார்.
கணவர் இயற்கைக்கு மாறான உறவுக்கு கட்டாயப்படுத்தியது உள்பட பல விஷயங்களை புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். கணவர் மட்டுமின்றி அவரது பெற்றோர் உள்பட 6 பேர் மீது அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார். அதோடு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை அவர்களின் வீட்டில் அவர் சந்தித்த பிரச்சனைகளை புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை ஏற்ற போலீசார் அந்த பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications