கலர் மாறிய உடை.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் போலீசை சுத்தலில் விடுகிறாரா? பரபர விசாரணை!
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி, தான் செல்லும்போது ஒரு இடத்தில் தனது உடையை மாற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை கண்டுபிடிப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில் கொள்ளை கும்பல் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் அந்த கும்பலை பார்த்ததும் பணிப்பெண் சத்தம் போட்டதைக் கேட்டு சைஃப் அலி கான் வெளியே வந்துள்ளார். அப்போது, அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சைஃப் அலி கானை 6 முறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதனை அடுத்து சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சைஃப் அலி கானுக்கு முதுகுத்தண்டு, கழுத்து ஆகிய பகுதிகளிலும் கத்திக்குத்து காயம் இருந்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இனி சைஃப் அலி கான் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், சைஃப் அலி கான் வீட்டின் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். சைஃப் அலி கான் வீட்டில் இருந்து பணியாளர்களிடமும் சந்தேகத்தின் பேரில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தப்பியோடிய நபரின் முக அடையாளம் தெரிந்தது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்ளில் வெளியிடப்பட்டது.
சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவன் என்று சந்தேகிக்கப்படும் நபர், ஆறாவது மாடியிலிருந்து இறங்கி வெளியேறும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது. அந்த இளைஞன் கருப்பு நிற டிஷர்ட் அணிந்திருந்தார். இதனை வைத்து குற்றவாளியை பிடிக்க பந்தரா போலீசார் 30 பேர் கொண்ட தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஆறாவது மாடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான அவனது முகத்தை போன்று பாந்தரா லக்கி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒருவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். சைஃப்ப் அலிகானின் வீட்டு 6-வது மாடியில் பதிவான குற்றவாளியின் முகத்துடன் ஒத்துப்போகும் வகையில் அந்த நபர் உள்ளதால் அந்த புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
சத்குரு ஷரன் கட்டிடத்தின் தீயணைக்கும் பைப் உள்ள இடத்திலிருந்து முந்தைய சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்டவர் அரைக்கை கருப்பு டி-சர்ட் அணிந்திருப்பது காணப்பட்டது.ஆனால், ரயில் நிலையத்தில் அதுபோன்ற நபர் நீல நிற சட்டை அணிந்திருந்தார்.
போலீசாரின் சந்தேக வளையத்தில் சிக்காமல் இருக்க, அந்த நபர் ஆடையை மாற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். உடனடியாக 20 குழுக்களை அமைத்து அவர் சார்ந்த தொழில்நுட்ப தரவுகளை சேகரித்துள்ளனர். தொடர்ந்து, தங்களின் உளவாளிகள் மூலம் அந்த நபரை பிடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று காலையில், பாந்த்ரா காவல்துறை ஒரு சந்தேக நபரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்தது. ஆனால் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, அவருக்கு இந்த வழக்குடன் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசார் கண்டறிந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். சைஃப் அலிகானின் கட்டிடத்தில் உள்ள சிசிடிவியில் சிக்கிய குற்றம் சாட்டப்பட்டவரைப் போலவே இருந்ததாலும், சிறிய க்ரைம்களில் ஈடுபட்டவர் என்பதாலும் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, இந்தக் கத்தி குத்து சம்பவத்தில் சில கிரிமினல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இதன் பின்னணியில் திருட்டு மட்டுமே நோக்கமாக இருந்துள்ளது என மாநில உள்துறை இணை அமைச்சர் யோகேஷ் கடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications