Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ச் கூட நகரல! முடங்கிய மும்பை சாலை! தண்ணீர் கூட இல்லாமல் இரவு முழுக்க பேருந்தில் சிக்கிய மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று மும்பை- அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் பல பள்ளி, கல்லூரி வாகனங்கள் இரவு முழுக்கவே டிராபிக்கில் மாட்டிக்கொண்டன. இதனால் தண்ணீர் கூட இல்லாமல் சுமார் 500+ குழந்தைகள் தவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இப்போது டிராபிக் மிகப் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. முன்பு ஓரிரு நகரங்களில் மட்டும் இருந்த டிராபிக் பாதிப்பு இப்போது பெரும்பாலான நகரங்களில் ஏற்படுகிறது. மும்பையும் கூட அப்படி தான் மோசமான டிராபிக் இருக்கும் ஒரு நகரமாக இருக்கிறது.

Massive Traffic Jam on Mumbai-Ahmedabad Highway Over 500 Students Stranded Overnight in Buses

கடும் போக்குவரத்து

இதற்கிடையே நேற்று மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மும்பை- அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கடும் போக்குவரத்து நெரிசலால் 500க்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பல மணி நேரம் வாகனங்கள் நகர முடியாமல் நின்றதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அந்த பாதிப்பு இன்னுமே கூட முழுமையாகச் சீராகவில்லையாம்.

நேற்று பிற்பகலில் இருந்தே இந்த டிராபிக் நெரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. மாலை அது உச்சத்திற்குப் போய் இருக்கிறது. மாலை 5:30 மணி முதல் புதன்கிழமை அதிகாலை வரை, மும்பை மற்றும் தானே பகுதிகளைச் சேர்ந்த 12 பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த டிராபிக்கில் சிக்கியுள்ளன. அதில் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 5 முதல் 10ஆம் வகுப்பு வரையில் படிக்கும் பள்ளி மாணவர்களும் இருந்துள்ளனர்.

சிக்கிய பள்ளி பேருந்துகள்

அருகே உள்ள விரார் என்ற பகுதிக்குச் சுற்றுலாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது இந்த டிராபிக்கில் அந்த பஸ்களும் சிக்கிக் கொண்டன. உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல மணி நேரம் மாணவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இரவு நேரமாக ஆகப் பசி, சோர்வு மற்றும் பதற்றம் குழந்தைகளிடையே அதிகரித்துள்ளது. இதனால் இரவுக்கு மேல் நிலைமை மோசமானது.

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் அருகே இருந்த சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குச் சிக்கித் தவித்த குழந்தைகளுக்குத் தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்களை வழங்கினர். மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அவர்கள் டிராபிக்கை சரி செய்யும் முயற்சியிலும் இறங்கினர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "பசியாலும் சோர்வாலும் மாணவர்கள் அழுதனர். போக்குவரத்து அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் அப்பாவி மாணவர்கள் இதில் சிக்கிக் கொண்டனர்" என்றார்.

என்ன காரணம்

அருகே உள்ள தானேவில் உள்ள கோத்புந்தர் நெடுஞ்சாலையில் சாலைப் பணிகள் நடந்துள்ளன. இதனால் அங்கிருந்த கனரக வாகனங்கள் இந்த ரூட்டிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இப்படி திடீரென அதிகரித்த வாகனங்களே டிராபிக் ஜாம் ஏற்படக் காரணமாக இருந்ததாக அந்த சமூக ஆர்வலர் கூறினார். இதுவே மும்பை-அகமதாபாத் சாலையில் டிராபிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "போக்குவரத்து நெரிசல் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுவிட்டது... இப்போது அதை சரி செய்து வருகிறோம்.. நெரிசல் மெதுவாகக் குறைந்து வருகிறது.. இருப்பினும், வாகனங்கள் மெதுவாகவே நகர்கின்றன" என்று குறிப்பிட்டார்.

இரவு முழுக்க சிக்கிய பேருந்துகள்

மாணவர்களை ஏற்றிச் சென்ற சில பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. அதேநேரம் மற்ற வாகனங்கள் நெரிசலில் தான் சிக்கி மெல்லச் சென்றுள்ளன. இன்று காலை 6 மணிக்கு தான் சில பள்ளி பேருந்துகள் டிராபிக் ஜாமில் இருந்தே தப்பியுள்ளன. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு மோசமான திட்டமிடல் மற்றும் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என பெற்றோர்களும் குற்றம் சாட்டினர். அவர்கள் மேலும், "எங்கள் குழந்தைகள் பல மணி நேரம் உதவியின்றி தவித்தனர்.. அங்கே போலீசார் கூட இல்லை.. குழந்தைகளுக்கு என்ன ஆனது என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை" என்றார். மேலும், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+