ஆனந்த் அம்பானி- ராதிகாவுக்கு திருமணம்!.. அழைப்பிதழை திறந்து பார்த்தால்.. அசத்தும் முகேஷ்- நீடா
மும்பை: ஆனந்த் அம்பானி மற்ரும் ராதிகா மெர்சன்டின் திருமண தேதி எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி கைப்பட எழுதிய பத்திரிகையும் வைரலாகி வருகிறது.
உலக பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். இவருக்கு மனைவி நீடா அம்பானி. இவர்களுக்கு ஈஷா, ஆகாஷ், ஆனந்த் ஆகிய ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர்.

ஈஷாவுக்கு திருமணமாகிவிட்டது. அது போல் முதல் மகன் ஆகாஷுக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஸ்லோகா மேத்தா வைர வியாபாரியின் மகன் ஆவார்.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்டுடன் காதல் வயப்பட்டதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் டேட்டிங் செல்வதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் கடந்த ஆண்டு வெகு விமரிசையாக நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இருவருக்கும் திருமணம் 2024 இல் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட்டின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதாவது அவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை திருமணமும் அதற்கு முந்தைய சடங்குகளும் நடைபெறும். இதுகுறித்து ஒரு அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.
இவர்களது திருமணம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆனந்த் அம்பானி குஜராத் ஜாம்நகரில் தங்கி அம்பானி கிரீன் எனர்ஜி என்ற வளாகம் கட்டும் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் திருமண அழைப்பிதழின் உள் பக்கம் முகேஷும் நீடாவும் கைப்பட எழுதியுள்ளனர். ஜாம்நகர் அம்பானி குடும்பத்திற்கு மிகவும் பிடித்தமான இடமாகும். அந்த அழைப்பிதழில் குஜராத்தில் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் இடத்தில் எனது மகனுக்கு நடைபெறும் திருமணத்திற்கு அழைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
1997ஆம் ஆண்டு மாபெரும் சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட்டு அங்கு 1 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் அந்த இடமே பசுமையானதாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட விலங்குகளை ஆனந்த் இங்குதான் வளர்த்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஜாம்நகரில் எங்களுக்கு பசுமையான நினைவுகள் உள்ளன. ஆனந்துக்கும் ராதிகாவுக்கும் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்ளுங்கள், வார இறுதியை மகிழ்ச்சியாக்குங்கள். இவ்வாறு நீடாவும் முகேஷும் குறிப்பிட்டுள்ளார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications