மனைவி கழுத்தை நெரித்து கொலை... தற்கொலை என நாடகமாடிய கணவன்
இளம் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவனையும் மாமியாரையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தினால் மனைவியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ள
மும்பை: கண்டிவாலா லால்ஜி படா பகுதியில் 22 வயதான இளம் பெண்ணின் உடலை போலீசார் கண்டு பிடித்தனர். அந்த பெண்ணின் கணவரும் மாமியாரும் அதை தற்கொலை என்று கூறி மூடி மறைக்கப் பார்த்தனர். ஆனால் அதை போலீஸ் நம்பவில்லை. அந்தப் பெண்ணின் கழுத்திலும் உடம்பிலும் இருந்த காய தழும்புகள் சந்தேகத்தை அதிகரிக்கவே தங்களின் விசாரணையை வேறு கோணத்தில் திருப்பினர். கடைசியில் அது கொலைதான் என்று உறுதியானது.
கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் பாஹிம் இனாம் பஸ்திவாலா என்பதாகும். இவரது கணவன் இனாம் பஸ்திவாலா. கடந்த சில ஆண்டுகளுக்குமுன் இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. ஒராண்டுகள் கூட அவர்கள் சந்தோசமாக இல்லை. தினம் தினம் சண்டைதான். மாமியாரின் குடைச்சல் வேறு கூடியது.

செல்போனில் மனைவி யாருடனோ ரகசியமாக பேசுகிறாள் என்று மகனிடம் போட்டுக்கொடுத்தார் மாமியார். அந்த கோபம் வேறு அதிகரித்தது. மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன் அடிதடியில் இறங்கினான், பதிலுக்கு பதில் பேசிய மனைவியின் கழுத்தை நெரித்தான் இதில் மூச்சுத்திணறிய பாஹிம் கடைசியில் மரணமடைந்தார்.
மனைவியை கொன்ற அவன் அதை தற்கொலை போல சித்தரித்தான். அவனது தாயாரும் கூடவே ஒத்து ஊதினாள். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோரோ இதை தற்கொலை என்று நம்ப மறுத்தனர். தங்கள் மகளின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகப்படவே, போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பரிசோதனையில் கழுத்திலும், தலையிலும் இருந்த காயங்கள் காட்டிக்கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பாஹிமை கொன்ற இனாம் பஸ்திவாலாவையும், அவரது அம்மாவையும் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே, கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இளம் பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications