"ஆண் விபச்சாரம்".. சோனாலியின் சொக்க வைக்கும் பேச்சில் கிறங்கி போன விஐபி.. இது மும்பை கூத்து..!

ஆண் விபச்சாரராக மாற விரும்பி ரூ.15 லட்சத்தை இழந்துள்ளார் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆண் விபச்சாரராக மாற ஒருத்தருக்கு ஆசை வந்துவிட்டது.. அதனால், 15 லட்ச ரூபாயை இழந்து தவித்த அதிர்ச்சி கலந்த சோகமும் நிகழ்ந்துள்ளது.
மும்பையை சேர்ந்தவர் அந்த தொழிலதிபர்.. இளம் வயதுக்காரர்.. தன் வியாபாரத்தில் நல்ல லாபத்தை சம்பாதித்து வந்தார்.. இந்த சமயத்தில் திடீரென லாக்டவுன் போட்டுவிடவும், பிசினஸ் மொத்தமாக டவுன் ஆகிவிட்டது.. அதனால் மாற்று வழியை யோசித்து கொண்டிருந்தார்.

அப்போதுதான், திடீரென அவருக்கு ஒரு போன் வந்தது.. அதில் ஒரு இளம்பெண் பேசினார்.. தன் பெயர் சோனாலி என்று அறிமுகப்படுத்தி கொண்டு பேசியுள்ளார்.. பிறகு அடுத்த சில நிமிடங்களில், தொழிலதிபரின் வயது விவரம், மற்றும் போட்டோவை தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டாராம்.

Mumbai man lose big after becoming Male escort

இவையெல்லாம் எதற்கு? என்று தொழிலதிபர் கேட்டதற்க, ஆண் எஸ்கார்ட் வேலைக்கு டேட்டிங் வெப் சைட்டில் தேர்ந்தெடுப்பதற்காகத்தான் என்று பதிலளித்துள்ளார். அதாவது, தினமும் புது புது பெண்களோடு உறவு வைத்து கொள்ள தயாராக இருக்க வேண்டுமாம்.. இதற்கு சம்பளமும் உண்டாம்.. தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என்று சோனாலி சொல்லி உள்ளார். அதாவது ஆண் விபச்சாரத்துக்கு ஆள் எடுப்பது!

ஏற்கனவே பண கஷ்டத்தில் நொடிந்து போயிருந்த தொழிலதிபரும், உடனே தன்னுடைய போட்டோ, வயது விவரங்களை அனுப்புவதாக சொன்னார்.. ஆனால், சோனாலி ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.. அப்படி இந்த வேலையில் சேருவதாக இருந்தால், அதற்கு லைசென்ஸ் எடுக்க வேண்டும், லைசென்ஸ் கட்டணமாக 4 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றார்.. தினமும் அவ்வளவு பணம் கிடைக்க போகிறதே என்ற பேராசையில், தொழிலதிபரும் சோனாலி கேட்ட பணத்தை கட்டினார்.

பிறகு சோனாலி 4 பெண்களின் போன் நம்பரை தந்து அவர்களிடம் பேச சொன்னார்.. மேலும் அந்த பெண்கள் கூப்பிடும் இடத்துக்கு போகுமாறும் சொன்னார்.. அதன்படியே தொழிலபதிரும், அந்த பெண்களுக்கு போன் செய்து பேசினார்.. ஆனால், அவர்களோ, எஸ்கார்ட் லைசென்ஸுக்கு இன்னும் மேலும் கூடுதல் பணம் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அந்த பெண்களின் பேச்சை நம்பி கடைசியில் 15 லட்சம் ரூபாய் வரை கட்டிவிட்டார் தொழிலதிபர்.. ஆனால், இதுவரை எந்த எஸ்கார்ட் லைசென்சும் வரவில்லை.. எந்த பெண்ணும் தொழிலதிபரை கூப்பிடவும் இல்லை.. இருந்த பணமும் போயாச்சு.. சோனாலியாவும் எஸ்கேப் ஆகியாச்சு.. கடைசியில்தான் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து போலீசில் போய் புகார் தந்துள்ளார் தொழிலதிபர்.. இப்போது இந்த புகாரை விசாரித்து வருகிறார்கள்.. சோனாலி எங்கே என்றே தெரியவில்லையாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+