"என் கிட்டே வராதீங்க.. வந்தீங்க.. அவ்வளவுதான்".. ஜெர்க் ஆன போலீஸ்.. லாவகமாக மீட்கப்பட்ட பாத்திமா!
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மும்பை போலீசார் மீட்டுள்ளனர்
மும்பை: "என்கிட்ட வராதீங்க.. வந்தீங்கன்னா, அவ்வளவுதான்.." என்று இளம்பெண் சொல்லவும் போலீசாரே கொஞ்சம் ஜர்க் ஆகிவிட்டனர்.. இதற்கு பிறகுதான் நைசாக பேச்சு கொடுத்து பாலத்தில் இருந்து அந்த பெண்ணை மீட்டனர்.
நவி மும்பையில் உள்ளது வாஷி பாலம். இந்த பிரிட்ஜ் மீது தடுப்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன.. இந்த பகுதிக்கு ஒரு பெண் கருப்பு நிற டிரஸ்ஸில் வந்து நின்றார்.

தடுப்பு கம்பியின் மறுபக்கத்தில் போய் நின்று கொண்டார்.. கீழே குதிச்சு சாக போறேன் என்று கத்தினார்.. அந்த பிரிட்ஜ் மீது நடந்து கொண்டிருந்தவர்கள் 'வேண்டாம், வேண்டாம்' என்று சொல்லியும், தொடர்ந்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டி கொண்டிருந்தார். அந்த தடுப்பு கம்பியை பிடிப்பதை விட்டுவிட்டால், அவர் நிஜமாகவே கீழே விழும் ஆபத்தில்தான் தொங்கி கொண்டிருந்தார்.
இந்த விஷயம் அறிந்து போக்குவரத்து போலீசார் அங்கு வந்துவிட்டனர்.. அவர்களை பார்த்ததும் அந்த பெண் சாக போவதாக சொன்னார்... ஆனால், போலீசார் பேச்சு தந்து கொண்டே அந்த பெண்ணின் அருகில் சென்றனர்.. அவர்கள் வருவதை கண்ட பெண், "கிட்ட வந்தீங்கன்னா குதிச்சிடுவேன்" என்று திரும்பவும் சொன்னார்.
ஆனாலும் அவரிடம் 4 போலீசார் பேச்சு தந்துகொண்டே மெல்ல நகர்ந்து பெண்ணிடம் சென்றனர்.. எட்டி நின்றபடியே அந்த பெண்ணை கீழே விழாதபடி பிடித்து கொண்டனர்.. பிறகு அவரை பாதுகாப்பாக மீட்டனர். தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணின் பெயர் பாத்திமா ஷேக் என்பது விசாரணைக்கு பிறகுதான் தெரிந்தது.. அது மட்டுமல்ல, இவருக்கு மனநிலை சற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சொல்கிறார்கள்.
அதனால் அவர் யார், என்ன விவரம் என்று உடனடியாக தெரியவில்லை... எதற்காக தற்கொலை முயற்சி என்றும் தெரியவில்லை.. இது சம்பந்தமான விசாரணை நடக்கிறது.. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை நவி மும்பை காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications