மும்பையில் கார் ஷோ ரூமில் தீ விபத்து.. தீயில் கருகிய காஸ்ட்லி கார்கள்! தொழிலாளர்களின் கதி?
மும்பை: மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கார் ஷோருமில் திடீரென தீ ஏற்பட்டது.
மும்பை சாக்கி விகார் சாலையில் ஸீ லேண்ட் ஓட்டல் அருகே ஹுண்டாய் கார் நிறுவனத்தின் ஷோரும் உள்ளது. இந்த ஷோருமுக்கு சொந்தமான கார் பழுது பார்க்கும் தொழிற்சாலையும் உள்ளது. இந்த ஆலையில் திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவம் அறிந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல லட்சம் மதிப்பு பொருட்கள் உள்ள இடம் என்பதால் புகை மூட்டம் அதிக அளவில் இருக்கிறது.
மேலும் தீ விபத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. ஆனாலும் விலை உயர்ந்த கார்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு மின்கசிவே காரணமாக இருக்கும் நம்பப்படுகிறது.
ஒருபுறம் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் இருந்தாலும் உள்ளே எவரேனும் சிக்கி உள்ளனரா என்ற விவரங்கள் தற்போது தெரியவில்லை. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
அதே சமயம் இந்த தீவிபத்தில் கார் பழுது பார்க்கும் கிடங்கில் இருந்த ரூபாய் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள், தளவாடங்கள், உதிரிபாகங்கள் போன்றவை எரிந்துவிட்டதாக அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர். முழுமையாக தீ அணைக்கப்பட்ட பிறகே உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என தெரியவரும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications