சிவசேனாவுக்காக தயாரித்த எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதம்.. அப்படியே பாஜகவுக்கு மாற்றி விட்ட அஜித் பவார்.!
Recommended Video
மும்பை: என்சிபி- காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைப்பதற்காக என்சிபி எம்எல்ஏக்கள் அளித்த ஆதரவு கடிதத்தை அஜித் பவார் தவறாக பயன்படுத்தி அதில் முதல்வரின் பெயர் காலியாக இருந்த இடத்தில் பட்னவீஸின் பெயரை நிரப்பி மோசடி செய்துவிட்டார் என காங்கிரஸும் என்சிபியும் குற்றம்சாட்டியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரவிருந்த நிலையில் சரத்பவாரின் உறவினர் அஜித்பவார் பாஜகவை ஆதரித்தார். இதனால் முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் இணைந்து ஆட்சி அமைத்தன.
இந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக அஜித் பவார் தன்னுடன் ஆலோசனை நடத்தவில்லை என சரத்பவார் குற்றம்சாட்டினார். மேலும் இது என்சிபியின் முடிவல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார். அது போல் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட புதிய ஆட்சிக்கு சரத்பவார் காரணமில்லை என்றும் இது அஜித் பவார் அவருக்கு செய்த துரோகம் என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

தகிடுதத்தம்
இன்று செய்தியாளர்கள் முன்பு என்சிபி எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தவுள்ளதாக சரத்பவார் கூறுவதை பார்த்தால் அஜித் பவார் ஏதோ தகிடுதத்தம் செய்துள்ளதாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து எம்எல்ஏவும் என்சிபியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கூறுகையில் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் வருகை தந்த என்சிபி எம்எல்ஏக்களின் வருகை பதிவேட்டுக்கு வாங்கப்பட்ட கையெழுத்தை அஜித் பவார் தவறாக பயன்படுத்திவிட்டார்.

ஆதரவு கடிதம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நிச்சயம் தோற்கும் என குறிப்பிட்டுள்ளார். அது போல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜூ வாக்மாரே கூறுகையில் என்சிபி எம்எல்ஏக்களின் குழுத் தலைவர் அஜித் பவார். என்சிபி எம்எல்ஏக்கள் காங்கிரஸ்- சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைப்பதற்காக தரப்பட்ட ஆதரவு கடிதம் அவர்தான் வைத்திருந்தார்.

கடினமான காரியம்
அதை ஆளுநர் கோஷ்யாரியிடம் காண்பித்து கடிதத்தை தவறாக பயன்படுத்திவிட்டார். எனவே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெறுவது கடினமான காரியம் என்றார். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில் காங்கிரஸ்- என்சிபி ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க என்சிபி கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் அளித்திருந்தனர்.

பாஜகவின் பட்னவீஸ்
அந்த கடிதம் அஜித் பவாரிடம் இருந்தது. மேலும் அதில் முதல்வரின் பெயர் குறிப்பிடப்படாமல் காலியாக விடுபட்டிருந்தது. இந்த நிலையில் அந்த கடிதத்தை தவறாக பயன்படுத்திய அஜித் பவார், அந்த கடிதத்தை ஆளுநரிடம் காண்பித்து அதில் முதல்வரின் பெயருக்காக விடுபட்டிருந்த இடத்தில் பாஜகவின் தேவேந்திர பட்னவீஸின் பெயரை சேர்த்துள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications