அந்த பக்கம் புயல்.. இந்த பக்கம் மழை.. ஓடுபாதையில் சறுக்கிய விமானம்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!
மும்பை: மும்பையில் நிசார்கா புயல் காரணமாக பெரிய அளவில் காற்று வீசிய நிலையில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு வெளியேறியது வைரலாகி உள்ளது.
அரபிக்கடலில் உருவான நிசார்கா புயல் தற்போது மகாராஷ்டிராவை புரட்டி போட்டுள்ளது. மும்பைக்கு அருகே இந்த புயல் கரையை கடந்தது. அதி தீவிர புயலான இது கரையை கடக்கும் போது வலுவிழந்தது.
புயல் கரையை கடக்கும் 90 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மும்பையில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

மும்பை விமான நிலையம்
மும்பையில் நிசார்கா புயல் காரணமாக பெரிய அளவில் காற்று வீசிய நிலையில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு வெளியேறியது வைரலாகி உள்ளது. மும்பை சத்ரபதி மகாராஜ் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று மதியம் 4.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்துக்கு உள்ளான விமானம் FedEx நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஆகும்.

என்ன ஆனது
FedEx உலகின் முன்னணி பார்சல் சர்வீஸ் விமான நிறுவனம் ஆகும். இந்த விமானம் சரக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரில் இருந்து மும்பை நோக்கி வந்து இருக்கிறது. பிரபல எம்டி -11 விமானம் ஆகும் இது. FedEx விமானம் எண் 5033 சரியாக புயல் வீசும் போது மும்பைக்கு அருகே வந்துள்ளது. அப்போது ஓடுபாதை முழுக்க தண்ணீர் இருந்துள்ளது.
|
அதிக காற்று வீசியது
அதேபோல் அங்கு பெரிய அளவில் காற்றும் வீசிக்கொண்டு இருந்தது. இதனால் விமானம் தரையிறங்கும் போதே தள்ளாடிக்கொண்டே இறங்கியது. அதிகமாக காற்று வீசிய நிலையில் விமானம் லேசாக ஆடிக்கொண்டே இறங்கியது. கடைசியில் ஓடுபாதையில் இறங்கிய விமானம் சறுக்கியபடி ஓடுபாதையை விட்டு வெளியே சென்றது. பாதையில் இருந்த நீர் காரணமாக விமானம் வெளியே சென்றது.

யாருக்கு ஆபத்து இல்லை
அதன்பின் விமானி சுதாரித்து விமானத்தை ஓடுபாதைக்கு வெளியே புல் தரையில் நிறுத்தினார். ஆனால் இந்த விபத்தில் அந்த விமானம் சேதம் அடையவில்லை. வேறு விமானம் எதுவும் சேதம் அடையவில்லை. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. மும்பையில் தற்காலிகமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications