பார்க்கும் போதே நமக்கு தலையெல்லாம் சுத்துதே.. நிச்சயம் அங்க போறவங்கள்ல பாராட்டித்தான் ஆகணும்!
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஒரு மலைகோட்டைக்கு செல்லும் ஆபத்தான மலைப்பாதையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
மும்பை: மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு மலைகோட்டைக்கு செல்லும் ஆபத்தான மலைப்பாதையின் வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்பித்து குஜராத் வரை நீளும் மேற்கு தொடர்ச்சி மலைகள் இயற்கை அன்னை நமக்கு கொடுத்த வரம். இந்த மலைத்தொடரில் ஏராளமான கோட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு சில கோட்டைகள் அத்தனை எளிதில் நெருங்க முடியாதவை.
அப்படி ஒரு மலைக்கோட்டை தான் பைரவ்காட் கோட்டை. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கிறது இந்த கோட்டை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4997 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டை, மூன்று மலைகளுக்கு இடையே உள்ளது.
View this post on InstagramA post shared by Xplorite🌎 (@rishi.pokharna) on
பழமையான கோட்டை
பைரவ்காட் கோட்டை சுமார் 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறுது. இந்த கோட்டையில் இரண்டு பெரிய குகைகள் உள்ளன. அதில் ஒன்றில் பைரவநாதர் கோயில் உள்ளது. சில துணிச்சல் மிக்க இளம் பக்தர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

துணிச்சல்கார இளைஞர்
அதுபோன்ற ஒரு துணிச்சல்கார இளம் பக்தர், பைரவ்காட் மலைக்கோட்டைக்கு சென்ற வீடியோவை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பல ஆயிரம் அடி உயரத்தில் ஒற்றையடி பாதையில், பக்கவாட்டில் பாறைகளில் கட்டப்பட்டுள்ள கயிற்றை பிடித்துக்கொண்டு அந்த பக்தர் மலையேறுகிறார். இதை பார்க்கும் போதே பலருக்கும் தலைச்சுற்றுவது உறுதி.

வலிமை அவசியம்
இத்தனை அடி உயரத்தில், இத்தனை செங்குத்தான ஆபத்து நிறைந்த பாதையில் பயணித்து பைரவ்காட் கோட்டைக்கு செல்ல நிச்சயம் மன உறுதியும், மலையேற்றப் பயிற்சியும், உடலில் வலிமையும் அவசியம் வேண்டும். இது அத்தனையும் இருந்தால் மட்டுமே பைரவ்காட் மலையேற்றம் சாத்தியமாகும்.

தொழிலாளர்கள்
ஒருமுறை சென்று வருவதற்கே இப்படி ஆபத்தான பாதையாக இருக்கிறதே.. அவ்வளவு உயரத்தில் எப்படி அந்தக் கோட்டையை அந்தக் காலத்தில் கட்டியிருப்பார்கள் என நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆபத்தான பாதையில் தான் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு சென்று அந்தக் கோட்டையை கட்டிய தொழிலாளர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications