எம்எல்ஏ, எம்பிக்களுக்கு இப்படி ஒரு கட்டுப்பாடு போடுங்க.. மக்கள் தொகையை குறைக்க அஜித் பவார் ஐடியா
மும்பை: நமது நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏக்கள் எம்.பிக்க்ளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மகராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியாவும் சீனாவும் உள்ளது. சீனா மக்கள் தொகை எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், அண்மையில் உலக மக்கள் தொகை நிலை - 2023 அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியது.
இந்த அறிக்கையின்படி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியே 86 லட்சம் ஆகும். சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 57 லட்சம் ஆகும். இதன் மூலம் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்திற்கு இந்தியா முன்னேறியது. இந்தியாவின் மக்கள் தொகை குறித்த அறிக்கையை வெளியிட்ட பிறகு ஐநா சபையின் மக்கள் தொகை நிதியம் இந்தியா அமைப்பின் பிரதிநிதி ஆண்டிரியா வோஜ்னர் கூறியதாவது:-

"இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி என்பது 140 கோடி வாய்ப்புகளாக பார்க்க வேண்டும். இந்தியாவில் 15-24 வயது இளைஞர்கள் எண்ணிக்கை 25 கோடியே 40 லட்சம் ஆகும். இது மிகப்பெரிய இளைஞர்களின் கூட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியாவைக் காட்டுவதாக கூறினார். இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித்தலைவரும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அஜித் பவார், மக்கள் தொகையை கட்டுப்படுத்த யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அஜித் பவார் கூறும் போது, சுதந்திரத்தின் போது நமது நாட்டில் 35 கோடி மக்கள் தொகை இருந்ததாக எனது தாத்தா என்னிடம் கூறுவார். ஆனால் இப்போது மக்கள் தொகை 142 கோடியை எட்டியுள்ளது.
இதற்கு நாம் எல்லாரும் தான் பொறுப்பு. நாடு, மாநிலம், மாவட்டம், பிராந்தியத்தின் நலனுக்காக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதை அனைவரும் நிறுத்த வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.
விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த சமயத்தில் நாங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோருக்கு மூன்று குழந்தைகள் மேல் இருந்தால் அவர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதனால் நாங்கள் அச்சம் அடைந்தோம். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருபது நமக்கு சாபமாகவே இருக்கும். எனவே, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு இதேபோன்ற ஒரு முடிவை ஏன் எடுக்கக் கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள்.
இது எங்கள் கைகளில் இல்லை மத்திய அரசின் கைகளில் உள்ளது என்று நான் தெரிவித்தேன். மத்திய அரசு இது போன்ற ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். சலுகைகள் மறுக்கப்பட்டால் மக்களுக்கு உடனடியாக விழிப்புணர்வு ஏற்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் எந்த சலுகையும் கொடுக்கக்கூடாது" என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications