ஆள் கடத்தல் சர்ச்சை.. பல மணி நேரம் தவித்த இந்திய பயணிகள்.. பிரான்ஸிலிருந்து பத்திரமாக மும்பை வந்தது!
மும்பை: இந்தியர்கள் உள்பட 303 பயணிகளுடன் சென்ற விமானம் ஆள்கடத்தல் தொடர்பான சந்தேகத்தில் பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மூன்று நாட்கள் விசாரணைக்கு பின்னர் விமானம் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் இன்று மும்பை வந்து சேர்ந்திருக்கிறது.
துபாயில் இருந்து நிகரகுவா நோக்கி கடந்த 21ம் தேதி ரோமானியன் நிறுவனமான லெஜன்ட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏ340 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் 303 பேர் இருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இந்நிலையில் பாரீசில் இருந்து கிழக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு விமானிகளுக்கு கட்டளையிடப்பட்டது. இதனையடுத்து விமானம் கடந்த 22ம் தேதி தரையிறக்கப்பட்டது.

இந்த அவசர தரையிறக்கத்திற்கான காரணம், விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக எழுந்த புகார்தான். பொதுவாக அமெரிக்கா செல்வதற்கு பலரும் தீவிரமாக முயற்சிக்கின்றன. ஆனால், எல்லோருக்கும் எளிதாக விசா கிடைத்துவிடுவதில்லை. இப்படி இருக்கையில், சட்டத்திற்கு புறம்பாக அந்நாட்டிற்குள் ஊருடுவ முயற்சிகள் நடக்கின்றன. இப்படி செல்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார்கள். எனவே 303 இந்தியர்களுடன் பறந்த விமானம் சந்தேகத்தின் அடிப்படையில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தை முழுமையாக சோதனையிட்ட அதிகாரிகள், பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பலரும் சட்டவிரோதமாக அமெரிக்கா, கனடா செல்ல திட்டம் வைத்திருந்தாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில் இந்தியர்களுடன் பறந்த விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டிருக்கும் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 3 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆள் கடத்தல் நடைபெறவில்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், அங்கிருந்து புறப்பட விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த 303 பேரும் துபாயில் இருந்து தனியார் விமானத்தை பிரத்யேகமாக வாடகைக்கு பிடித்து நிகரகுவா சென்று கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விமானம் இன்று 276 பயணிகளுடன் மும்பை வந்து சேர்ந்திருக்கிறது. மீதமிருந்த பயணிகள், தங்கள் நாடுகளுக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறிய நிலையில், பிரான்ஸில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications