யார் ரியல் சிவசேனா? கட்சி சின்னம் யாருக்கு.. தாக்கரே & ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே தரப்புக்குத் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
மகாராஷ்டிராவில் சுமார் 2.5 ஆண்டுகளாக சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. இருப்பினும், கடந்த மாதம் அங்கு திடீரென குழப்பம் ஏற்பட்டது.
அங்கு சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் திடீரென தலைமறைவானார்.

மகாராஷ்டிரா
கட்சி முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டில் இருந்ததாக நினைத்த தாக்கரேவுக்கு, இது மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. இதையடுத்து மகா விகாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அப்போது பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ட்விஸ்ட்
இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத வகையில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராகப் பதவியேற்றார். பட்னாவிஸை துணை முதல்வராகப் பதவியேற்றார். சிவசேனாவிடம் இருக்கும் 55 எம்எல்ஏக்களில் 40 பேர் ஷிண்டேவுக்கு ஆதரவாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இரு தரப்பும் தார்களைத் தான் அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாகக் கருத வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரவு
இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. சிவசேனாவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தங்களிடம் இருப்பதை நிரூபிக்க ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு தரப்பையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையம்
ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 1 மணிக்குள் இந்த விவகாரத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு இரு தரப்பிற்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னரே சிவசேனாவின் இரு பிரிவினரின் கோரிக்கை தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று உத்தவ் தாக்கரே தரப்பும் ஷிண்டே தரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த அனில் தேசாய், கட்சியின் சில உறுப்பினர்கள் கட்சி விரோதச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி பலமுறை தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஷிண்டே பிரிவினர் 'சிவசேனா' மற்றும் 'பாலா சாஹேப்' என்ற பெயர்களைப் பயன்படுத்தும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டே, குலாப்ராவ் பாட்டீல் உள்ளிட்டோரைக் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று அனில் தேசாய் குறிப்பிட்டு இருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே
அதேநேரம் மறுபுறம் ஏக்நாத் ஷிண்டே தரப்பை உண்மையான சிவசேனாவாக அறிவிக்க வேண்டும் என்றும் கட்சியின் சின்னமான "வில் அம்பு" சின்னத்தை சிவசேனாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஷிண்டே தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகியது. மொத்தம் உள்ள 55இல் 40 எம்எல்ஏக்கள், பல எம்எல்சிக்கள், 12 எம்பிக்களின ஆதரவு தனக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

தேர்தல் ஆணையம்
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறுகையில், "மேலே குறிப்பிட்டுள்ள சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. அதில் ஒரு குழு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உள்ளது, மற்றொரு குழு உத்தவ் தாக்ரே தலைமையில் உள்ளது. இரு தரப்பும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 1:00 மணிக்குள் தங்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று கூறப்பட்டு உள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications