கையில் "நெருப்பு.." சுற்றி நின்ற தொண்டர்கள்! செம மாஸாக மகாராஷ்டிராவில் என்டரி கொடுத்த ராகுல் காந்தி
மும்பை: ராகுல் காந்தியின் தனது ஒற்றுமை பாத யாத்திரையை 61ஆவது நாளில் மகாராஷ்டிராவில் நுழைந்து உள்ளார்.
ராகுல் காந்தி இப்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மிக பிரம்மாண்டமான பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல் காந்தி இந்த பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். மேலும், பாஜகவுக்கு எதிராக மக்களைத் திரட்ட இந்த நடைபயணத்தை மேற்கொள்வதாகவு்ம அவர் குறிப்பிடுகிறார்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி இதுவரை இவ்வளவு பெரிய பாத யாத்திரையை நடத்தியதில்லை. அந்தளவுக்கு மிக பிரம்மாண்டமான பாத யாத்திரை நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் முடியும் நிலையில், இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாகவே காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர்.. குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ராகுல் காந்திக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்தது.

மகாராஷ்டிரா
பாத யாத்திரையின் 61ஆவது நாளில் ராகுல் காந்தி நேற்றிரவு தெலுங்கானாவின் மெனுரு கிராமத்திலிருந்து மகாராஷ்டிராவிற்குள் நுழைந்தார். இரவு நேரத்தில் கையில் நெருப்பு பந்தத்தை தூக்கியபடி ராகுல் காந்தி மகாராஷ்டிராவுக்குள் நுழைந்தார். அவருடன் பல காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் சென்றனர். இது தொடர்பான வீடியோவையும் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சத்ரபதி சிவாஜி
தெலங்கானா மகாராஷ்டிரா எல்லையில் திரண்டு இருந்த காங்கிரஸ் தொண்டர்கள், ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.. இதையடுத்து அங்கிருந்த சத்ரபதி சிவாஜி சிலைக்கும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். மகாராஷ்டிராவிலும் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பெருந்திரளான மக்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

பேரணிகள்
தெலுங்கானாவில் மொத்தம் 12 நாட்கள் பாத யாத்திரை நடந்த நிலையில், அவர் பல்வேறு தரப்பு மக்களிடமும் உரையாடினார். இப்போது பாத யாத்திரை மகாராஷ்டிராவில் நுழைந்துள்ள நிலையில், தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மூவர்ணக் கொடியை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலேவிடம் வழங்கினார். மகாரஷ்டிராவில் ராகுல் காந்தி தலையில் சில பேரணிகளும் நடைபெற உள்ளது.

புகார்
முன்னதாக பாரத் ஜோடோ யாத்திரையின் போது அனுமதியின்றி கேஜிஎஃப் பாடல்களைப் பயன்படுத்தியதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ராகுல் காந்தி உட்பட 3 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது காப்புரிமைச் சட்டத்தை மீறியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு வணிக கோர்ட், காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் தற்காலிகமாக முடக்க உத்தரவிட்டது.

முடக்கம்
இதன் காரணமாக எங்கு ஒற்றுமை பாத யாத்திரைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அக்கட்சியினர் கவலை எழப்பினர்.. இருப்பினும், இதன் காரணமாக பாத யாத்திரைக்கு எல்லாம் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒற்றுமை யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பை கண்டு அஞ்சியே, அதை முடக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளதாகவும் காங்கிரஸினர் கூறுகின்றனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications