மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க.. மத்திய அரசு எடுத்துள்ள சபாஷ் நடவடிக்கை.. பொதுமக்கள் பாராட்டு

Google Oneindia Tamil News

மும்பை: நாட்டில் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஏதுவாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

நாட்டில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது.

Railways to run Oxygen Express to meet high demand amid surge in COVID-19 cases

இருப்பினும், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா போன்ற அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா பரவல்..தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு.. மோடிக்கு மன்மோகன்சிங் வழங்கிய நச் ஐடியாக்கள்கொரோனா பரவல்..தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு.. மோடிக்கு மன்மோகன்சிங் வழங்கிய நச் ஐடியாக்கள்

இந்நிலையில், நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நாட்டின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு முடியும் எனத் தேசிய போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

3ஆம் அலை மிக விரைவில் தொடங்கும்.. நடவடிக்கைகளில் அரசியல் இல்லை.. அறிவியல் மட்டுமே.. ஆதித்ய தாக்கரே3ஆம் அலை மிக விரைவில் தொடங்கும்.. நடவடிக்கைகளில் அரசியல் இல்லை.. அறிவியல் மட்டுமே.. ஆதித்ய தாக்கரே

முதல்கட்டமாக மும்பையின் காலியானி மற்றும் போய்சார் ரயில் நிலையங்களில் இந்திய ரயில்கள் காலியாக தனது பயணத்தைத் தொடங்கும். பின்னர், வைசாக், ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா மற்றும் பொகாரோ ஆகிய இடங்களில் திரவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்த ரயில்கள் ஏற்றிக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், எந்த இடங்களுக்கு ஆக்சிஜன் உடனடியாக தேவை ஏற்படுகிறதோ, அங்கு விரைவாக ரயில்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் ஆக்சிஜன் லாரிகளை ரயில்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியுமா எனக் மத்திய அரசுக்குக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Railways' latest announcement to run 'Oxygen Express' to meet high demand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X