மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் மீது பழி போடுவது? மகாராஷ்டிரா கவர்னரை அதிரடியாக மாற்றும் பாஜக.. புதிய ஆள் வருகிறார்!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை மத்திய பாஜக அரசு மாற்ற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மளமள சரிவு! |The number of BJP ruling states is steadily decreasing.

    மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை மத்திய பாஜக அரசு மாற்ற வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும் புதிய ஆளுநராக கால்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட உள்ளார்.

    மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா செய்ததை அடுத்து தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார். இது அங்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை மாலை உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    அரசியல் திருப்பம்

    அரசியல் திருப்பம்

    மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் திருப்பங்களுக்கு, பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒருவகையில் ஆளுநர் பகத் சிங் காரணம் என்றும் கூறலாம். அவரின் அவசரமான நடவடிக்கையும் இதற்கு ஒரு காரணம். அவர் கொஞ்சம் பொறுமையாக செயல்பட்டு, பாஜகவின் பெரும்பான்மை குறித்து கேள்வி எழுப்பி இருந்தால் அங்கு பாஜகவிற்கு இவ்வளவு பிரச்சனைகள் வந்து இருக்காது.

    என்ன பெரும்பான்மை

    என்ன பெரும்பான்மை

    பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறதா என்று முறையாக சோதிக்காமல் அவர்தான் பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வேகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை விலகிக் கொள்ள பரிந்துரை செய்தார். இதனால் எப்போதும் போல இல்லாமல் அவசர அவசரமாக அதிகாலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.

    என்ன கடுமை

    என்ன கடுமை

    இதனால் அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தார். அவரின் ஆலோசனையால், மத்திய அமைச்சரவை கூட அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விலகிக் கொள்ளப்பட்டது. இதனால் தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவரை பதவி விலகும்படி கோரிக்கை வைத்து வருகிறது. தற்போது பாஜக கட்சி இவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    ஆளுநர் எப்படி

    ஆளுநர் எப்படி

    அதன்படி ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை மத்திய பாஜக அரசு மாற்ற வாய்ப்புள்ளது என்கிறார்கள். அவருக்கு பதிலாக புதிய மகாராஷ்டிரா ஆளுநராக கால்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட உள்ளார் என்கிறார்கள். கல்ராஜ் மிஸ்ரா தற்போது ராஜஸ்தான் கவர்னராக இருக்கிறார்.

    கல்ராஜ் மிஸ்ரா

    கல்ராஜ் மிஸ்ரா

    கல்ராஜ் மிஸ்ரா இதற்கு முன் இமாச்சல பிரதேச கவர்னராக இருந்தார். அதேபோல் உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சியின் கீழ் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். உத்தர பிரதேச மாநில பாஜக துணை தலைவராகவும் இருந்திருக்கிறார். பகத் சிங் மீதான விமர்சனம் காரணமாக தற்போது அவருக்கு பதில் கல்ராஜ் மிஸ்ரா அங்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Rajasthan Governor Kalraj Mishra is likely to replace Maharashtra governor Koshyari.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X