ரத்தன் டாடாவின் ரூ.3900 கோடி சொத்து.. யாருக்கு என்ன கிடைக்கும்! உயிலில் கூறப்பட்டுள்ளது என்ன?
மும்பை: இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படும் ரத்தன் டாடா கடந்தாண்டு அக்டோபர் மாதம் காலமானார். இதற்கிடையே இப்போது அவரது உயில் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. ரத்தன் டாடா வசம் ரூ.3,900 கோடி சொத்து இருந்த நிலையில், அதில் யாருக்கு என்ன கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் ரத்தன் டாடா. டாடா குழுமத்தை உலகெங்கும் விரிவுபடுத்தியதில் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியமானது. சில காலமாகவே வயது மூப்பு காரணமாக பிஸ்னஸில் இருந்து டாடா ஒதுங்கியே இருந்தார்.

ரத்தன் டாடா மறைவு
கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாகக் காலமானார். இதற்கிடையே மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் சொத்துகள் யாருக்குச் செல்லும் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2022 பிப்ரவரி 22ம் தேதி ரத்தன் டாடா இந்த உயிலில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். இந்த உயிலில் உள்ள தகவல்களைப் பிரபல ஆங்கில இதழான தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. அதன்படி ரத்தன் டாடா, தனது செல்வத்தின் பெரும்பகுதியைத் தனது சொந்த அறக்கட்டளைகளுக்கு விட்டு சென்றுள்ளார்.
ரத்தன் டாடா வசம் இருந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகள், நிறுவனங்கள் சட்டம் 2014இன் பிரிவு 8இன் கீழ் லாப நோக்கமற்ற அமைப்பான ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் டிரஸ்ட் (RTET) மற்றும் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளை (RTEF) ஆகியவற்றுக்குச் செல்லும். டாடா சன்ஸ் நிறுவனத்தின் 3,368 பங்குகள் ரத்தன் டாடா வசம் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1,684 கோடியாகும். மேலும், ரத்தன் டாடா குறிப்பிடாத இதர முதலீடுகளும் அறக்கட்டளைகளுக்கே செல்லும்.
ரூ.3,900 கோடி சொத்து
மேலும், டாடாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.3,900 கோடியாக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் கூறப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் உயிலில் சுமார் 24 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அவரது ஒன்றுவிட்ட சகோதரிகளான டீனா ஜெஜீபாய் மற்றும் ஷிரீன் ஜெஜீபாய், அவரது சகோதரர் நோயல் டாடா மற்றும் ரத்தன் டாடாவின் இளம் வயது நண்பராக அறியப்பட்ட சாந்தனு நாயுடு ஆகியோரின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரத்தன் டாடாவின் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கள், கடிகாரங்கள் மற்றும் வங்கி நிரந்தர வைப்புத்தொகைகள் மட்டும் சுமார் ரூ. 800 கோடி மதிப்புள்ளவை ஆகும். இதனை அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரிகளான டீனா ஜெஜீபாய் மற்றும் ஷிரீன் ஜெஜீபாய் ஆகியோருக்கு எழுதி வைத்துள்ளார்.
செல்லப்பிராணிகளை மறைக்கவில்லை
ரத்தன் டாடா தனது உயிலில் தனது நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி செல்லப்பிராணிகளுக்குக் கூட செல்வத்தைப் பகிர்ந்து எழுதியிருக்கிறார். தனது செல்லப்பிராணிகளின் பராமரிப்பை உறுதி செய்ய மட்டும் அவர் ரூ.12 லட்சம் எழுதி வைத்துள்ளார். அதுவும் காலம் முழுக்க பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.30,000 வழங்கப்படும் என்பதை உயிலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்..
ரத்தன் டாடா உயில்- சாந்தனு நாயுடு
மேலும், ரத்தன் டாடாவின் இளம் வயது நண்பராகவும் முன்னாள் உதவியாளருமாக அறியப்பட்ட சாந்தனு நாயுடு வெளிநாட்டிற்குச் சென்று படித்ததில் கடன் ஏற்பட்டு இருந்தது. அந்த கடனை தள்ளுபடி செய்வதாக ரத்தன் டாடா உயிலில் குறிப்பிட்டுள்ளார். சாந்தனு நாயுடு இப்போது டாடா நிறுவனத்தில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ரத்தன் டாடாவின் பக்கத்து வீட்டுக்காரரான ஜேக் மாலைட் என்பவருக்கும் வட்டியில்லா கல்விக் கடனை அளிப்பதாகத் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
ரத்தான் டாடாவுக்கு மும்பையில் உள்ள ஜூஹு தாரா சாலையில் பீச் பங்களா ஒன்று இருக்கிறது. அந்த பங்களாவின் உரிமையில் பாதியை உடன் பிறந்த சகோதரர் ஜிம்மி டாடாவுக்கு (ரத்தன் டாடா உடன் பிறந்த ஒரே சகோதரர் ஜிம்மி டாடா ஆவர்) எழுதி வைத்துள்ளார். மீதமுள்ள பகுதி (தற்போதைய டாடா டிரஸ்ட் தலைவர்) நோயல் டாடா மற்றும் சிமோன் டாடா இடையே பிரித்து தருவதாக எழுதி வைத்துள்ளார். மேலும், தனது நீண்டகால நண்பரான மெஹ்லி மிஸ்திரிக்கு அலிபாக் பங்களாவைக் கொடுத்துள்ளார்.
நீண்ட கால ஊழியர்
கூடுதலாக, டாடா குழுமத்தில் நீண்ட காலமாக வேலை செய்து வரும் மூத்த தலைவரான மோகினி எம். தத்தாவுக்கு ரத்தன் டாடாவின் மொத்த செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை விட்டுச் சென்றுள்ளார். மோகினி எம். தத்தாவுக்கும் உயிலை நிறைவேற்றுவோருக்கும் இடையே சில கருத்து வேறுபாடு இருந்ததால் கடந்த வாரம் இது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications