88 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மாயம் ஆனதாக வெளியான தகவல்.. ரிசர்வ் வங்கி கொடுத்த பரபரப்பு விளக்கம்
மும்பை: நாசிக்கில் உள்ள பணம் அச்சடிக்கும் அச்சகத்தில் இருந்து புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களில் 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணமல் போனதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
நமது நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ் அச்சம், பெங்களூரில் உள்ள பார்திய ரிசர்வ் வங்கி முத்ரைன் லிமிடெட் உள்ளிட மூன்று அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் பேரில் அச்சடிக்கப்படும் இந்த பணத்தாள்கள் பிறகு ரிசர்வ் வங்கி கணக்கிற்கு கொண்டு வரப்பட்டு புழக்கத்தில் விடப்படும்.

அந்த வகையில், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 தாள்களில் 375.450 மில்லியன் தாள்கள் காணமால் போனதாக பரபரப்பு புகார் எழுந்தது. அதாவது அச்சடிக்கப்பட்ட பணத்திற்கும் ரிசர்வ் வங்கியின் கணக்கிற்கும் வந்த பணத்திற்கும் பெரும் தொகை வேறுபாடு இருந்ததாக ஆர்.டிஐ சட்டத்தின் கூறப்பட்டு இருந்தது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் 500 ரூபாய் நோட்டுகளின் நிலை குறித்து மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரம் கேட்டு இருந்தார்.
அதில், நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ் அச்சகத்தில் இருந்து 375.450 மில்லியன் தாள்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் ஆனால் ரிசர்வ் வங்கிக்கு 345.000 மில்லியன் 500 ரூபாய் தாள்கள் மட்டுமே ஏப்ரல் 2015 மற்றும் டிசம்பர் 2016 இடைப்பட்ட காலத்தில் கிடைத்ததாகவும் கூறப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. இதனால் 88 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் காணமால் போனதாக பரபரப்பாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், ரூபாய் நோட்டுக்கள் காணாமல் போனதாக வெளியான தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அச்சகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தவறான தகவல்களின் அடிப்படையில் அறிக்கைகள் உள்ளதாகவும் அச்சகங்களில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படும் அனைத்து ரூபாய் நோட்டுக்களும் சரியாக கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கி வெளியிடும் தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அச்சகங்களில் அச்சடிக்கப்படும் பணம் மற்றும் அவற்றின் விநியோகத்தை கண்காணிப்பது, பிரித்து வழங்குதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வலுவான அமைப்பை ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications