பர்சனல் லோன், வீட்டு லோன் இருக்கிற.. ஒவ்வொருத்தங்களும் கவனிக்க வேண்டிய விஷயம்.. RBI விதி மாற்றம்
மும்பை: வங்கிகளின் கடன் வசூல் முறையில் நிலவும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியான புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. "பொறுப்பான வணிக நடத்தை" (Responsible Business Conduct) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விதிகள், 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. 2026 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் வங்கிகள் மற்றும் கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) பின்படுத்த வேண்டிய கடுமையான கட்டுப்பாடுகளை வகுத்துள்ளன. குறிப்பாக, நள்ளிரவு நேர அழைப்புகள் மற்றும் மிரட்டல் விடுத்து கடன் வசூலிக்கும் முறைகளுக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கண்ணியமான கடன் வசூல் முறை
புதிய வரைவு விதிகளின்படி, கடன் வசூல் முகவர்கள் காலை 08:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், கடன் வாங்கியவரின் உறவினர்கள், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவதற்கும், அதன் மூலம் கடனாளியை அவமானப்படுத்துவதற்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் கடன் வசூல் முறையில் நிலவும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன .
உதாரணம்: ரமேஷ் என்பவர் தனது கிரெடிட் கார்டு நிலுவையைச் செலுத்தத் தாமதம் செய்கிறார். இதுவரை, நள்ளிரவு 11 மணிக்கோ அல்லது அதிகாலை 5 மணிக்கோ வசூல் முகவர்கள் அழைத்து மிரட்டி வந்தனர்.
புதிய விதி: இனிமேல், காலை 08:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை மட்டுமே ரமேஷை அழைக்க முடியும். இந்த நேரத்தைத் தாண்டி வரும் அழைப்புகள் சட்டவிரோதமானவை.
கடுமையான வசூல் முறைகளாகக் கருதப்படுபவை எவை என்பதையும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது:
ஆபாசமான அல்லது மிரட்டும் மொழியைப் பயன்படுத்துதல்.
சமூக வலைதளங்கள் அல்லது மொபைல் செயலிகள் மூலம் தவறான செய்திகளை அனுப்புதல்.
குடும்பத்தில் மரணம், திருமணம் அல்லது திருவிழா போன்ற உணர்வுபூர்வமான தருணங்களில் வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
ஒருவரது குடும்பத்தில் மரணம் போன்ற துக்க நிகழ்வோ அல்லது திருமண விழாவோ நடக்கும்போது, முகவர்கள் அங்கு சென்று ரகளை செய்வது வாடிக்கையாக இருந்தது.
புதிய விதி: துக்க நிகழ்வுகள், திருமணங்கள் அல்லது முக்கியப் பண்டிகைகளின் போது கடன் வசூல் நிமித்தமாக வீட்டிற்குச் செல்லவோ, போன் செய்யவோ கூடாது.
கடன் திருப்பிச் செலுத்தாததால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் குறித்து தவறான தகவல்களை அளித்தல்.
உதாரணம்: கடன் வாங்கிய ஒருவரைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், அவரது நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது அலுவலக மேலதிகாரிக்கு அழைத்து, "அவர் கடனைத் திருப்பிக் கட்டவில்லை" என்று கூறி அவமானப்படுத்துவது வழக்கமாக இருந்தது.
புதிய விதி: வங்கி முகவர்கள் கடன் வாங்கியவர் அல்லது ஜாமீன் கொடுத்தவரைத் தவிர வேறு யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது. மற்றவர்களுக்குத் தகவல் தெரிவிப்பது கடும் குற்றமாகக் கருதப்படும்.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பாக நடப்பது
இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, கடன் வசூல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து அழைப்புகளையும் வங்கிகள் பதிவு செய்ய வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட கடன் வசூல் முகவர்களின் பட்டியலை வங்கிகள் தங்களது இணையதளம் மற்றும் செயலிகளில் வெளியிட வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களை அணுகுபவர் உண்மையான முகவர் தானா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
மிக முக்கியமாக, கடன் வசூல் இலக்குகளை அடைவதற்காக முகவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை முறைகள், அவர்களை வன்முறையான அல்லது கடுமையான வசூல் முறைகளுக்குத் தூண்டாத வகையில் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர் ஒருவர் வங்கியில் புகார் அளித்தால், அந்தப் புகார் தீர்க்கப்படும் வரை வசூல் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்களும், வங்கி நிறுவனங்களும் தங்களது கருத்துகளை 2026 மார்ச் 6-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வணிக வங்கிகள் மட்டுமின்றி, சிறு நிதி வங்கிகள் (Small Finance Banks) மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் (NBFC) இதே போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications