"சர்வதேச சதி.." சைஃப் அலி கான் மீதான தாக்குதலில் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் திடுக் திருப்பம்
மும்பை: சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், மும்பை நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்த மும்பை நீதிமன்றம், இதில் சர்வதேச சரி இருக்கலாம் என்பது போல கருத்து கூறியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பாலிவுட் பிரபலம் சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 16ம் அவரது வீட்டில் வைத்து தாக்கப்பட்டார். மர்ம நபர் அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார்.

தாக்குதல்:
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. போலீசார் விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையின் போது மும்பை நீதிமன்றம் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது கைதான நபர் வங்கதேசத்தை சேர்ந்தவராக இருப்பதால், இதில் சர்வதேச சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், கத்தியால் குத்திய நபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தது.
சர்வதேச சதி:
இது தொடர்பாக நீதிபதி மேலும் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் வங்கதேச குடிமகன். இதில் சர்வதேச சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது. எனவே, விசாரணை அதிகாரிக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும். அந்த நபரை 5 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சைஃப் அலிகான் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரீபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று பிற்பகல் பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர்.
போலீஸ் தரப்பு வழக்கறஞர்:
போலீசார் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் சைஃப் அலி கானின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, நடிகரை தாக்கி காயப்படுத்தி இருக்கிறார். மேலும், இருவர் இதில் காயமடைந்துள்ளனர். இதனால் சைஃப் அலி கான் படுகாயம் அடைந்துள்ளார். அந்த நபர் எப்படி வீட்டுற்குள் நுழைந்தார்.. இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை நாம் விசாரிக்க வேண்டும். மேலும், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்.. அவர் எப்படி நாட்டுக்குள் நுழைந்தார் என்பதும் முக்கியம். இதனால் விசாரணைக்கு எங்களுக்கு 14 நாள் காவல் தேவை” என்று வாதிட்டார்.
எதிர்தரப்பு வழக்கறிஞர்:
இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் மும்பையில் வசிக்கும் இந்திய குடிமகன் என்றும் வாதிட்டார். அவர் மேலும் கூறுகையில், "சைஃப் அலி கானுக்கு இதில் தொடர்பு இருப்பதால் இது தேவையில்லாமல் பரபரப்பான விஷயமாக மாற்றப்படுகிறது. இல்லையெனில், இது ஒரு சாதாரண வழக்காக கருதப்பட்டிருக்கும். காவலில் எடுக்க தெளிவாக காரணங்கள் குறிப்பிடப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதற்கு முன்பு எந்தவொரு குற்ற பின்னணியும் இல்லை.. அவர் பலிகடா ஆக்கப்படுகிறார்" என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை நீதிமன்ற நீதிபதி, "விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.. குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தற்போது கைதாயிருக்கிறார். எனவே, போலீசார் தாரளமாக விசாரணைக்கு கோரலாம். குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் நியமற்றது போலவே தெரிகிறது. இதில் சர்வதேச சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது" என்ற நீதிபதிகள் அந்த நபரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications