26 ஆண்டுகளுக்கு முன் சல்மான் கான் மான் வேட்டை புகார்! பாபா சித்திக் கொலைக்கு இதுதான் காரணமாம்! பகீர்
மும்பை: மகாராஷ்டிர அரசியல்வாதி பாபா சித்திக் நேற்றிரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் கான் நடத்திய மான் வேட்டை இந்த கொலைக்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான பாபா சித்திக் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பல காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், சமீபத்தில் தான் அஜித் பவாரின் என்சிபி கட்சியில் இணைந்திருந்தார்.

தனது மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு முன்பு நின்று இருந்த போது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 66.
பாபா சித்திக் பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தார். குறிப்பாக சல்மான் கானுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே கொலை செய்தியைக் கேட்ட சல்மான் கான் பிக்பாஸ் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தார். இதற்கிடையே பாபா சித்திக் கொலைக்குப் பிரபல கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இந்த லாரன்ஸ் பிஷ்னோய் கேங் தான் இதற்கு முன்பு நடிகர் சல்மான் கானையும் கொலை செய்ய முயன்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த படுகொலை குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிஷ்னோய் தற்போது குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த ஒன்பது நாட்களாக யாருடனும் பேசாமல் மவுன விரதம் இருந்துள்ளான்.. பொதுவாகத் தனது கேங் எதாவது பெரிய சம்பவம் செய்யும் போது இதுபோல லாரன்ஸ் மவுன விரதத்திற்குப் போய்விடுவானாம். இந்த முறையும் அதேபோல மவுன விரதம் இருந்த போதே ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக அதிகாரிகள் நினைத்துள்ளனர். இந்தச் சூழலில் தான் பாபா சித்திக்கை படுகொலை செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, பிஷ்னோய் கேங்கை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், பாபா சித்திக் கொலைக்குப் பொறுப்பேற்றார். பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் பாபா சித்திக்கிற்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் அதுவே கொலைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த சமூக வலைத்தள பதிவில் மேலும், "சல்மான் கான் அவர்களே, நாங்கள் இந்த போரை விரும்பவில்லை.. ஆனால் எங்கள் சகோதரன் மரணத்திற்கு நீங்கள் காரணமாகிவிட்டீர்கள்.. எங்களுக்கு யாருடனும் பகை இல்லை.. அதேநேரம் சல்மான் கான் அல்லது தாவூத் கும்பலுக்கு யார் உதவினாலும் அவர்களின் கணக்கு இதுபோல தீர்க்கப்படும்.. நாங்கள் யாரையும் முதலில் தாக்க மாட்டோம். அதேநேரம் எங்கள் சகோதரனை யாராவது கொன்றால் நிச்சயம் பதிலடி கொடுப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
பிஷ்னோய் சமூகத்தினர் அரிய வகை மானான கலைமானை (blackbucks) கடவுளாக வழிபடுவார்கள். கடந்த 1998ம் ஆண்டு இந்த வகை மானை சல்மான் கான் வேட்டையாடியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.. ஆனாலும், லாரன்ஸ் பிஷ்னோய் கேங் இவரை இதற்காகவே தொடர்ந்து குறிவைத்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் கூட மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டில் இதே பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்து குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications