அஜித் பவார் மரணத்தில் சதிச்செயல் இருக்கா? துயரத்தில் வாடும் சரத் பவார் வேதனையுடன் பகிர்ந்த மேட்டர்
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த சம்பவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த நிலையில் இதனை சரத்பவார் மறுத்துள்ளார். அஜித் பவார் உயிரிழந்தது விபத்து தான்.. இதில் அரசியலை கொண்டு வரவேண்டாம் என்றும் சரத் பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று விமான விபத்தில் உயிரிழந்தார். தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக சிறிய ரக விமானத்தில் சென்ற அவர் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் அஜித் பவார் உள்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மட்டும் இன்றி நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அஜித் பவார் மரணத்தில் அரசியல் இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி அதிர வைத்தார்.
இவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சித் தலைவரும், அஜித்பவாரின் சித்தப்பாவுமான சரத்பவார் இதனை மறுத்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், அஜித் பவாரின் மரணம் மகாராஷ்டிராவுக்கு பெரிய அதிர்ச்சி. கடினமாக உழைக்கும் மற்றும் திறமையான ஒரு தலைவரை மகாராஷ்டிரா இழந்துவிட்டது.
அஜித் பவாரின் இழப்பினை ஈடு செய்ய முடியாது. எல்லாம் நம் கைகளில் இல்லை. இந்த சம்பவத்தில் ஏதோ அரசியல் சம்பந்தப்பட்டு இருப்பதாக கொல்கத்தாவில் இருந்து ஒரு கருத்து பரப்பப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. இதில் அரசியல் எதுவும் இல்லை. இது ஒரு விபத்து. இதில் அரசியலை கொண்டு வரவேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications