தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கட்சி தாவக்கூடாது..பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய உத்தவ் சிவசேனா
மும்பை: கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டு நடந்த சம்பவங்களை உத்தவ் சிவசேனாவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் மறந்திருக்காது. இப்படி இருக்கையில் இந்த முறை தனது வேட்பாளர்களிடம், கட்சி தாவல் செய்ய மாட்டோம் என்று பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறது.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை சிவசேனாதான் வெயிட். ஆனால் கடந்த 2019 தேர்தலில் பாஜக அதிக இடங்களை வென்றிருந்தது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. எனவே சிவசேனாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. கொஞ்ச நாட்களிலேயே இரு கட்சிகளுக்கு இடையேயும் பஞ்சாயத்துகள் வெடித்தன. எனவே கூட்டணியிலிருந்து சிவசேனா கழன்றுக்கொண்டது. மீதம் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணியை உருவாக்கி ஆட்சியை அமைத்தது.

இங்குதான் பாஜகவின் அரசியல் தொடங்கியது. அதாவது, சிவசேனாவில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சி தன் பக்கம் இழுக்க தொடங்கியது. பாஜகவுக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாக தெரியும், அதாவது மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியாது. அப்படி செய்யும் அரசியல் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவும் செய்தது. எனவே வெளியே வந்த ஷிண்டேவை வைத்து உண்மையான சிவசேனா நாங்கள்தான் என்று நீதிமன்றத்தை நாட வைத்தது.
நீதிமன்றமும் ஷிண்டேவுக்குதான் சிவசேனாவை கொண்டாட உரிமை இருக்கிறது என்று கூறி சின்னத்தையும் அவருக்கு ஒதுக்கி கொடுத்தது. இப்படியாக 2022ல் உத்தவ் சிவசேனா பின்னடைவை சந்தித்தது. பால் தாக்ரே வைத்து பிரசாரம் மேற்கொண்ட வில் அம்பு சின்னத்தை உத்தவ் தாக்ரே இழந்துவிட்டார். அவர் தலைமையிலான கட்சிக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் மனம் தளராது அரசியலில் நிலையாக நின்று வருகிறார்.
மறுபுறம் தேசியவாத காங்கிரஸுக்கும் இதுதான் நடந்தது. அதாவது, கடந்த 2023ம் ஆண்டு கட்சின் முக்கிய தலைவராக இருந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் விலகி சென்று, தேசியவாத காங்கிரஸ் கட்சி தன்னுடைய அமைப்புக்குதான் சொந்தம் என்று கொண்டாடினார். இப்படியாக இந்த கட்சியும் உடைந்தது. இப்போது உடைந்து சென்றவர்கள் பாஜக பக்கம் இருக்கின்றனர். பாஜகவும் இவர்களை வைத்து பெரும்பான்மை காட்சி ஆட்சியை கைப்பற்றிவிட்டது.
இந்த இரண்டு சம்பவங்களும் உத்தவ் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கருப்பு புள்ளியாக அமைந்துவிட்டது. எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்கமாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தங்களது வேட்பாளர்களிடம் கட்சி தலைவர்கள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அதாவது தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நாங்கள் கட்சி மாறமாட்டோம் என்று கூறி கையெழுத்து பெற்றிருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications