அப்பாடா.. மகாராஷ்டிரத்தில் ஆட்சி குறித்து ஆளுநராவது முன்னெடுத்தாரே.. சிவசேனா குஷி
மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது குறித்த விவகாரத்தை மாநில ஆளுநராவது முன்னெடுத்தாரே என சிவசேனா மகிழ்ச்சியில் உள்ளது.
மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் என்சிபி 54 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. 288 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு பெரும்பான்மை கிடைக்க 146 இடங்கள் தேவை.
நடந்து முடிந்த தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பதவி வேண்டும்
ஆனால் சிவசேனாவோ முதல்வர் பதவியில் சரிசம பங்கு கேட்டது. ஆனால் பாஜகவோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனினும் சிவசேனா விடாப்பிடியாக எதற்கு மசியாமல் முதல்வர் பதவியிலேயே குறியாக இருக்கிறது.

மகாராஷ்டிர ஆளுநர்
இதையடுத்து என்சிபி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்தது. ஆனால் அதற்கு இரு கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தேவேந்திர பட்னவீஸ் முதல்வர் பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு பட்னவீஸை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக் கொண்டார்.

சிவசேனா
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்தார். மேலும் பெரும்பான்மையை சட்டசபையில் 11-ஆம் தேதிக்குள் நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இதை சிவசேனா வரவேற்றுள்ளது.

உரிமை அதிகம்
இதுகுறித்து சிவசேனையின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் கூறுகையில் ஆட்சி அமைப்பது குறித்த நடவடிக்கைகளை ஆளுநராவது தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாஜக தனி பெரும் கட்சியாகும். அதிக தொகுதிகளை பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்க முதலில் உரிமை கோர அக்கட்சிக்கே உரிமை உண்டு என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications