முகேஷ் அம்பானி வீடு தகர்க்கப்படும்.. நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய போன்.. மர்ம நபரை தூக்கிய போலீஸ்
மும்பை: மும்பையில் உள்ள 27 மாடி கொண்ட அன்டிலா என்ற முகேஷ் அம்பானியின் வீட்டை குண்டு வைத்து தகர்த்துவிடுவதாக பீகாரை சேர்ந்த நபர் நள்ளிரவில் போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு மும்பையில் உள்ள அல்டாமவுன்ட் ரோட்டில் பிரம்மாண்ட சொகுசு வீடு உள்ளது.

முகேஷ் அம்பானி வீடு
அன்டிலா என்ற பெயரிலான இந்த வீட்டை அம்பானி குடும்பத்தினர் பார்த்து பார்த்து கட்டினர். வீட்டிலேயே ஹெலிபேட் என இந்த வீட்டில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த வீடு 27 மாடிகளை கொண்டது. இந்த வீட்டில் 600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

குண்டு வைத்து தகர்த்துவிடுவதாக
இந்த நிலையில், மும்பையில் உள்ள Sir HN Reliance Foundation Hospital- மருத்துவமனைக்கு புதன்கிழமை மர்ம நபர் ஒருவர் இருமுறை போன் செய்துள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் போனை எடுத்ததும், முகேஷ் அம்பானியின் அன்டலியா வீட்டையும் இந்த மருத்துவமனையையும் குண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு போனை வைத்துள்ளார். இதனால் பதறிப்போன மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பீகார் நபர் கைது
இதையடுத்து, பாதுகாப்பை அதிகரித்த போலீசார், தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்தது பீகாரை சேர்ந்த நபர் என்று தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகேஷ் அம்பானிக்கு அண்மையில் இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பாதுகாப்பு அதிகரிப்பு
அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக தகவல் கிடைத்ததால், முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதேபோல், அவரது மனைவி நிதா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications