Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மது அருந்தி கொண்டாட்டம்..தட்டிக்கேட்ட பயணிகளிடம் அத்துமீறல்..மும்பை வந்த விமானத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: துபாயில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் மதுபோதையில் 2 பயணிகள் ரகளையில் ஈடுபட்டதோடு தட்டிக்கேட்ட பயணிகளிடம் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் மும்பை வந்திறங்கிய உடன் அந்த 2 பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக விமான பயணத்தின் போது பயணிகள் சிலர் சக பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுக்கு இடையூறாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் கூட ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது ஷங்கர் மிஸ்ரா என்ற பயணி குடிபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விமான பயணிகள் பாதுகாப்பு

விமான பயணிகள் பாதுகாப்பு

இந்த விவகாரம் விமான பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் வகையிலும் அமைந்து இருந்தது. இந்த நிலையில், துபாயில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் இரண்டு பயணிகள் ரகளையில் ஈடுபட்டதோடு விமான சிப்பந்திகள் மற்றும் பயணிகளை அவதூறாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

துபாய் டூ மும்பை

துபாய் டூ மும்பை

துபாயில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான 6E 1088 என்ற விமானம் கடந்த புதன்கிழமை வந்து கொண்டிருந்தது. விமானம் புறப்பட்டதும் விமானத்தில் இருந்த பயணிகள் இரண்டு பேர் மது அருந்த தொடங்கியுள்ளனர். இதைக் கவனித்த பயணிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த இரு பயணிகளும் சக பயணிகளை அவதூறாக பேசினர். ஏற்கனவே மதுபோதையில் இருந்த இந்த இரு பயணிகளும் விமான சிப்பந்திகள் எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

பாதுகாப்பு படை வீரர்களிடம் ஒப்படைப்பு

பாதுகாப்பு படை வீரர்களிடம் ஒப்படைப்பு

ஒரு பயணி விமானத்தின் நடுவே பயணிகள் நடக்கும் பாதையில் நடந்து சென்றபடி மது குடித்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால், அவரிடம் இருந்த பாட்டிலை விமான சிப்பந்திகள் பறித்துள்ளனர். இந்த இரு பயணிகளும் நடந்து கொண்ட விதம் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் ஒருவித அசவுகரியத்தை ஏற்படுத்தியது. விமானம் மும்பையில் தரையிறங்கியதும் இரு பயணிகளும் விதிகளின் படி மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இரு பயணிகளும் கைது

இரு பயணிகளும் கைது

அதேபோல், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலும் விமான நிறுவனத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 336 ( பிறருடைய உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நடந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ளுதல்) மற்றும், 21,22,25 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இரு பயணிகளையும் போலீசார் கைது செய்தனர். வளைகுடா நாட்டில் பணிபுரியும் இருவரும் சொந்த்ந ஊர் திரும்பிய போது விமானத்தில் ரகளையில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

நடப்பு ஆண்டில் 7-வது முறை

நடப்பு ஆண்டில் 7-வது முறை

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் விமானத்தில் இதுபோன்ற பயணிகள் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவம் நடப்பது இது 7-வது முறையாகும். கடந்த 11 ஆம் தேதி லண்டன் - மும்பை விமானத்தில் பயணி ஒருவர் புகை பிடித்ததோடு எமெர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பயணியையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+