சண்டைக்கு நாங்க ரெடி..சூடான மகாராஷ்டிரா தேர்தல் களம்! பட்டியலை நீட்டிய உத்தவ்! ஷிண்டேவுக்கு நெருக்கடி
மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், தேர்தலில் 65 தொகுதிகளில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர்களின் பட்டியலை உத்தவ் தாக்கரே புதன்கிழமை வெளியிட்டுள்ளார். அதில் வொர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரே மீண்டும் களம் இறங்குகிறார். கோப்ரி-பஞ்சபகடி சட்டமன்றத் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டேவை எதிர்த்து களமிறங்கிறார் கேதார் திகே.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக - சிவசேனா ( ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் ( அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்லது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், நவம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தற்போது பாஜக, சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அஜித் பவர் என்சிபி, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தற்போது பாஜகவின் கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு முடிவடைந்திருக்கும் நிலையில் பாஜக 156 தொகுதிகளிலும், ஷிண்டே சிவசேனா 78 தொகுதிகளிலும், அஜித் பவார் என்சிபி 54 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதே போல காங்கிரஸ் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், கூட்டணி கட்சிகளும் தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்த்து களம் இறங்குகின்றன. அந்த கூட்டணியின் தொகுதி பங்கீடும் இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 85 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகள் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாஜக ,சிவசேனா கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸின் 38 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. அஜித் பவர் தனது கோட்டையான பாராவதி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அஜித் பவரின் அண்ணன் மகன் யுபேந்திர பவார் களம் இறங்குகிறார். இதேபோல், சகன் புஜ்பால் யோலா தொகுதியிலும், திலீப் வால்ஸ் பாட்டீல் அம்பேகான் தொகுதியில் களத்தில் உள்ளனர். இகத்புரியில் ஹிராமன் கோஸ்கரும், அமராவதியில் ஷுல்பா கோட்கேவும் போட்டியிடுகின்றனர். இருவரும் சமீபத்தில் என்சிபியில் (அஜித் பவார்) சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த நிலையில் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில் மகராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் 65 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் உத்தவ் தாக்கரே. அதன்படி மீண்டும் வொர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரே களம் இறங்குகிறார். கோப்ரி-பஞ்சபகடி சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை எதிர்த்து ஆனந்த் திகேயின் மருமகன் கேதார் திகே போட்டியிடுகிறார். ஷிண்டேவின் வழிகாட்டியாக இருந்தவர்தான் ஆனந்த் திகே என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் விக்ரோலி சட்டமன்ற தொகுதியில் இருந்து சுனில் ரவுத், தான்விக்ரோலி சட்டமன்ற தொகுதியில் ராஜன் விச்சாரே, டோம்பிவிலி விக்ரோலி சட்டமன்ற தொகுதியில் திபேஷ் மத்ரே, பச்சோரா விக்ரோலி சட்டமன்ற தொகுதியில் இருந்து வைஷாலி சூரியவன்ஷி ஆகியோர் களத்தைச் சந்திக்கும்முக்கிய வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications