Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சிகளை இணைக்கும் உத்தவ் - ராஜ் தாக்கரே? மகாராஷ்டிரா அரசியலில் பெரிய ட்விஸ்ட்.. பாஜகவுக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ‛‛நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம். இனி ஒன்றாகவே இருப்போம்'' என்று 20 ஆண்டு பகையை மறந்து ராஜ் தாக்கரேவை அரவணைத்து உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே ஆகியோரின் கட்சிகள் ஒன்றாக இணைக்கப்படுகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு சிக்கல் ஏற்படலாம்.

சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரே. இவரது மகன் உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) அணியின் தலைவராக உள்ளார். பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ராஜ் தாக்கரே. இவர் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக உள்ளார். பால் தாக்கரே - ஸ்ரீகாந்த் தாக்கரே ஆகியோர் ஒன்றாக இருந்தனர். ஆனால் அவர்களின் வாரிசுகளான உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே இடையே பிரிவு ஏற்பட்டது.

we-have-come-together-to-stay-together-says-uddhav-thackeray-it-indicates-that-the-two-parties-mig

கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார். சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கட்சியில் இருந்து வெளியேறினார். ராஜ் தாக்கரே தனி கட்சியை தொடங்கி தலைரவராக செயல்பட்டு வருகிறார்.

இருவரும் பெரியப்பா - சித்தப்பா மகன்கள் என்றாலும் கூட குடும்ப விழாவில் ஒன்றாக பங்கேற்பது இல்லை. 20 ஆண்டுகளாக இருவர் இடையேயும் பேச்சுவார்த்தை இல்லாமல் பகை தொடர்ந்தது. ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மும்மொழி கொள்கையின் ஒருபகுதியாக ஹிந்தி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்தி கட்டாயம் என்பதன் மூலம் மராத்தி மொழி பாதிக்கப்படும் என்று போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து ஆளும் பாஜக அரசு அந்த கொள்கையில் இருந்து பின்வாங்கியது.

இதையடுத்து இன்று வோர்லியில் உள்ள என்எஸ்சிஐ அரங்கில் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. இதில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக பங்கேற்றனர். 20 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒன்றாக மேடை ஏறினர். அவாஜ் மராத்தி சா (வாய்ஸ் ஆப் மராத்தி) என்ற பெயரில் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த விழாவில் உத்தவ் தாக்கரே பேசும்போது, ‛‛நங்கள் ஒன்றாக வந்துள்ளோம். இனி ஒன்றாகவே இருப்போம்'' என்றார். இதன்மூலம் வரும் காலத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் அரசியலில் சேர்ந்து செயல்பட உள்ளார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) அணியின் தலைவராக உள்ளார். அதேபோல் ராஜ்நாத் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக உள்ளார். விரைவில் இரு கட்சிகளும் ஒன்றாக இணைய உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏனென்றால் சிவசேனாவை ஏக்நாத்ஷிண்டே தனியாக பிரித்து சென்றுவிட்டார். இதனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல் ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சியும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனால் இருகட்சியினரும் கவலையில் உள்ளனர். விரைவில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலையொட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கட்டாயம் உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரேவிற்கு உள்ளது. இதற்கிடையே தான் தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து இருப்பது என்பது மகாராஷ்டிரா அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவை எடுத்து கொண்டால் மாநிலம் முழுவதும் தாக்கரேவின் குடும்பத்துக்கு என்று செல்வாக்கு உள்ளது.

ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே பிரிவு, சிவசேனா இரண்டாக உடைந்தது உள்ளிட்டவற்றால் தற்போது அவர்களின் செல்வாக்கு சரிவடைந்துள்ளது. இப்படியான சூழலில் ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே ஆகியோர் இணைவது தாக்கரேவின் குடும்பத்தின் செல்வாக்கை மீண்டும் அதிகரிக்கும் என்பது மட்டுமின்றி உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே ஆகியோரின் நிர்வாகிகளுக்கு புத்துயிர் கொடுக்கும். இது நடக்கும் பட்சத்தில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு சிக்கல் ஏற்படலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+