"உடும்பை".. கதற கதற.. அதுவும் நடுக்காட்டில்.. 3 வெறியர்களின் வீடியோவை பார்த்து உறைந்து நின்ற போலீஸ்
3 இளைஞர்கள் மகாராஷ்டிர காட்டில் உள்ள உடும்பை பலாத்காரம் செய்துள்ளனர்
மும்பை: காட்டுக்குள் சுற்றித்திரிந்த 3 பேரின் செல்போன்களில் இருந்த வீடியோக்களை பார்த்தபோதுதான், வனத்துறை போலீசார் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர்..!
கடந்த சில காலமாகவே, மிருகங்களையும் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.. நாய், கன்றுக்குட்டி என்று காமுகர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.
ஒரு நாய்க்கு எதிரான மிருகத்தனம் என்றும், பலர் விலங்குகளை மதிக்காததுதான், இதுபோன்ற பாலியல் நிகழ்வுகளுக்கு காரணம் என்பதால், இதுபோன்ற கொடூர வன்கொடுமையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஏராளமான கோரிக்கைகளை விடுத்தபடியே உள்ளனர்.

பசுமாடு
மிருகங்களை பலாத்காரம் செய்வது இயற்கைக்கு முரணான விஷயம் என்றபோதிலும், இது தொடர்பாக கைதாபவர்களின் எண்ணிக்கையும் குறைவது போல தெரியவில்லை... அதிலும் வட மாநிலங்களில் இதுபோன்ற குற்றங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட கேரளாவில் கொடுமைநடந்தது.. காசர்கோடு அருகே கோட்டச்சேரி பகுதியில் ஒரு ஓட்டலில் ஆடு ஒன்றை வளர்த்துள்ளனர்.. அது 4 மாத சினையாக இருந்துள்ளது... சம்பவத்தன்று நடுராத்திரி 1.30 மணிக்கு அந்த ஆடு கதறியது..

ஆட்டுக்குட்டி
வழக்கத்திற்கு மாறாக ஆடு நள்ளிரவில் சத்தம் போடுவதை கேட்டு அந்த ஓட்டல் ஊழியர்கள் எழுந்துச்சென்று பார்த்தபோதுதான், பார்த்தனர்.. அந்த சினை ஆட்டை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. இந்த 3 பேரில் ஒருவர் நம் கோவையை சேர்ந்தவர் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்... அதுபோலவே இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது..

காட்டுப்பகுதி
மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது... இந்த காட்டுக்குள் 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் திரிந்துள்ளனர்.. இவர்களை வனத்துறையினர் கவனித்துவிட்டு, அழைத்து விசாரித்தனர்.. 3 பேருமே பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களாம்.. 3 பேருமே வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்தது... இருந்தாரும், அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி வனத்துறையினர் சோதித்தனர்.

வண்டவாளம்
அப்போதுதான் இவர்களின் வண்டவாளம் வெளியே வந்தது.. அதில் இருந்த வீடியோவை பார்த்து போலீசாரே மிரண்டுபோய்விட்டனர்.. சில வாரங்களுக்கு முன்பு, இதே காட்டுப்பகுதிக்கு இவர்கள் 3 பேரும் வந்திருக்கிறார்கள்.. அங்கிருந்த பெரிய வகை பல்லி இனமான அதாவது உடும்பை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.. அதைதான் வீடியோ எடுத்து செல்போனில் பதிந்து வைத்திருப்பது தெரியவந்தது..

உடும்பு
அதுமட்டுமல்ல, மறுபடியும் பாலியல் வன்புணர்வு செய்வதற்காக, அதே உடும்பை தேடி காட்டுக்குள் சுற்றி திரிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.. உடும்பை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பிவிட்டு வருகிறது. இறுதியில், இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரிய வகை பல்லி
இதுதொடர்பாக, ஒரு வனத்துறை அதிகாரி சொல்லும்போது, வன விலங்குகளை பாலியல் பலாத்காரம் செய்தால் எந்த வகையான தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும், அதுவும் பாதுகாக்க வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் பல்லி இனங்கள் வருகின்றன என்பதால், இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் 7 வருட வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications