ரத்தன் டாடா மறைவுக்கு பின்.. அவரது இளம் நண்பர் சாந்தனு நாயுடு இப்போது என்ன செய்கிறார் தெரியுமா
மும்பை: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு கடைசிக் காலங்களில் நெருங்கிய நண்பராகவும் மேனேஜராகவும் இருந்தவர் சாந்தனு நாயுடு. டாடா மறைந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது சாந்தனு நாயுடு என்ன செய்து கொண்டு இருக்கிறார். அவரது வருங்கால திட்டங்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் உள்ள முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்று டாடா குழுமம். உப்பு முதல் அதிநவீன சொகுசு கார் வரை என எல்லாவற்றிலும் டாடா குழுமத்தின் தயாரிப்புகள் நிச்சயம் இருக்கும்.

டாடா குழுமத்தை இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியமாக மாற்றுவதில் ரத்தன் டாடாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அவர் டாடா குழுமத்தின் தலைமை பதவிக்கு வந்த பிறகு தான் அது பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாக பிஸ்னஸில் இருந்து விலகியே இருந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த அக். 9ம் தேதி ரத்தன் டாடா திடீரென காலமானார். அவருக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பலரும் இரங்கலும் அஞ்சலியும் செலுத்தினர்.
இதற்கிடையே ரத்தன் டாடாவின் நண்பரும் மேனேஜருமாக இருந்த சாந்தனு நாயுடு இப்போது என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு அவர் தனது வாழ்க்கையில் இப்போது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சாந்தனு நாயுடு தனது புக்கீஸை பிராஜக்ட்டை இப்போது விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார். புக்கீஸ் என்பது மக்களிடையே மீண்டும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டு வரும் ஒரு திட்டமாகும்.
மும்பையில் முதலில் இந்த புக்கீஸ் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இதற்கு புனே மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் அடுத்த கட்டமாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை டிச. 8ம் தேதி ஜெய்ப்பூரில் இந்த புக்கீஸ் நிகழ்வு நடைபெறும் என்றும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் சாந்தனு நாயுடு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில், "ஜெய்ப்பூருக்கான நேரம் இது.. ஞாயிற்றுக்கிழமை 8ஆம் தேதி ஜெய்ப்பூர் புக்கீஸில் நாம் சந்திக்கலாம். உங்களைச் சந்திக்க உற்சாகமாகக் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். சாந்தனு நாயுடு தனது புக்கீஸ் நிகழ்வை அடுத்து டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் சூரத் உள்ளிட்ட நகரங்களிலும் நடத்த விரும்புகிறார். முன்னதாக அவர் கடந்த மாதம் தான் பெங்களூரில் புக்கீஸ் கூட்டத்தை நடத்தியிருந்தார்.
முன்னதாக தனது புக்கீஸ் நிகழ்ச்சி ஏன் முக்கியமானது என்பது குறித்து அவர், "வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் மக்களிடையே கொண்டு வருவதே புக்கீஸின் நோக்கம். புத்தகம் படிப்பது நமக்குப் புதுவித அனுபவத்தைத் தருகிறது. ஒரு விஷயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதில் இது நமக்கு உதவுகிறது. ஏனென்றால் இப்போது நாம் குறுகிய ரீல்ஸ்களை மட்டுமே பார்க்கிறோம். முழு வீடியோவை பார்க்கும் அளவுக்குக் கூட நம்மிடம் பொறுமை இல்லை" என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடா இருந்தவரை எப்போதும் சாந்தனு நாயுடு அவருடன் தான் இருந்து வந்தார். நாயுடுவின் வெளிநாட்டுப் படிப்புக்கான கடனை கூட டாடா தான் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடுவின் பெயரும் உயிலில் இடம்பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications