சைரஸ் மிஸ்திரி கார் விபத்திற்கு காரணம் என்ன? வெளியான புது தகவல்.. தடயவியல் குழுவால் அம்பலம்
மும்பை : டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி (54), மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த விபத்துக்கான முக்கிய காரணத்தை தடயவியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான பார்சி சமூகத்தை சேர்ந்த சைரஸ் மிஸ்ட்ரி கார் விபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது உடல் ‛‛டவர் ஆப் சைலன்ஸ்'' மூலம் கழுகுகளுக்கு இரையாக்கப்படாமல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
'டாடா சன்ஸ்' தலைவராக இருந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்ட்ரி. 54 வயது நிரம்பிய இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி மெர்சிடஸ் காரில் சென்று கொண்டிருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே பல்கர் எனும் இடத்தில் சூரிய நதி பாலத்தில் கார் சென்றது. அப்போது திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது.

சைரஸ் மிஸ்ட்ரி பலி
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்ட்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஜஹாங்கிர் தின்ஷா பண்டோல் என்பவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கார் ஓட்டிய அனாஹிதா பண்டோல் மற்றும் அவரது கணவர் டாரியஸ் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீட் பெல்ட் அணியாததால்...
இதில் அனாஹிதா பண்டோல், டாரியஸ் ஆகியோர் முன் இருக்கையில் இருந்தவர்களை ஏர்பேக் காப்பற்றியுள்ளது. மாறாக சைரஸ் மிஸ்ட்ரி, ஜஹாங்கிர் தின்ஷா பண்டோல் ஆகியோர் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததும், இதனால் அவர்கள் விபத்தில் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தடயவியல் துறையினர் விசாரணை
இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் 7 பேர் குழு கொண்ட தடயவியல் துறையினர் சோதனை மேற்கொண்டு விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி ஆய்வு, விசாரணை நடத்தினர்.

மோசமான வடிவமைப்பு
இந்நிலையில் தான் தடயவியல் பிரிவினரின் ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கார் விபத்தில் உயிரிழந்தவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை எனவும், பாலத்தின் மிக மோசமான வடிவமைப்பே விபத்துக்கு காரணம் என தடயவியல் துறையினர் கூறியுள்ளனர். மேலும் காரில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் மிகச் சரியாக வேலை செய்துள்ளது எனவும் தடயவியல் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications