அடேங்கப்பா.. 66 கிலோ தங்கம், 295 கிலோ வெள்ளி! இந்தியாவின் பணக்கார விநாயகர் இவர் தான்! எங்கே தெரியுமா
மும்பை: நாடு முழுக்க விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிலேயே மிகவும் பணக்கார விநாயகர் சிலை எங்கே உள்ளது. அதில் இருக்கும் சிறப்புகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாடு முழுக்க சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி சமயத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும்.

நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் பல சைஸ்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இந்த விநாயகர் சிலைகளுக்குச் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படும். இந்த விநாயகர் சிலைகளில் எது பணக்கார விநாயகர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எங்கே இருக்கிறது: பெரிதும் சிறிதுமாகப் பல விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டாலும் நாட்டிலேயே பணக்கார விநாயகர் சிலை மகாராஷ்டிராவில் தான் வைக்கப்பட்டுள்ளது.. ஜிஎஸ்பி சேவா மண்டல் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களை வியக்க வைக்கும் வகையில் மகா கணபதி சிலைகளை நிருவூவார்கள். இந்தாண்டும் அப்படியொரு வேற லெவல் விநாயகர் சிலையை நிறுவியுள்ளனர். இந்த விநாயகர் சிலை தான் இந்தியாவின் பணக்கார விநாயகர் சிலையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த விநாயகர் சிலைக்கு 66.5 கிலோ தங்க ஆபரணங்கள், 295 கிலோ கிராம் வெள்ளி அணிவிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரின் கிங்ஸ் சர்க்கிளில் பகுதியில் 69ஆவது ஆண்டாக இந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அங்கே முதல்முறையாகப் பாதுகாப்பு நடைமுறைகளில் பேஸ் ரெகக்னிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைக்குச் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. மேலும், இந்தாண்டு அவர்கள் ₹ 360.40 கோடிக்குக் காப்பீடும் எடுத்துள்ளனர்.
காப்பீடு ஏன்: ஒவ்வொரு ஆண்டும் இந்த விநாயகர் சிலையைப் பல ஆயிரம் பேர் வழிபாடு செய்வார்கள். இதில் பலத்த கூட்ட நெரிசல் ஏற்படும். இதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் காப்பீடு எடுப்பார்கள். அதன்படியே இந்தாண்டு ₹ 360.40 கோடிக்குக் காப்பீடு எடுத்துள்ளனர். தங்க, வெள்ளி நகைகளுடன் காட்சி தரும் இந்த விநாயகருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தாண்டு தினசரி சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் வரை இங்கே வந்து வழிபாடு செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் இதேபோல விநாயகர் சதுர்த்திக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைக்க பல்வேறு நிபந்தனைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. விநாயகர் சிலை அடித்தளத்தில் இருந்து மொத்தம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. சிலைகளைப் பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு அருகில் வைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிபந்தனைகள்: மேலும், மதவாத பொறுப்புணர்ச்சியைத் தூண்டும் விதமாகவோ, பிற மதத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடவோ,அரசியல் கட்சிகள் அல்லது மத ரீதியிலான தலைவர்களுக்கு ஆதரவான பதாகைகளையோ, விளம்பர தட்டிகளையோ வைக்கக் கூடாது எனவும் சென்னை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.குறிப்பாக, விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் சிலைகளைக் கரைக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications