ஒன் பை டூ..மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து ஓவர்! நாளை பேசி முடிக்கும் அமித் ஷா! டெல்லிக்கு பறக்கும் தலைகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் நிறைவடைந்து பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த பாஜக தரப்பில் முதலமைச்சர் பதவியேற்பார் எனவும், இரு துணை முதலமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் நாளை சந்திக்கவுள்ளனர்.

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுறது.

maharashtra assembly election 2024 devendra fadnavis eknath shinde 2024

இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மொத்தம் உள்ள 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏத்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கின. கடந்த 20ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது. இதில் பாஜக மட்டுமே 132 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் காய் நகர்த்தி வருகிறார். அதே நேரத்தில் சிவசேனா நிர்வாகிகளோ ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக வேண்டுமென விரும்பினர்.

இதனால் மகா யுதி கூட்டணியில் திடீர் பிளவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே. அப்போது பேசிய அவர்," பிரதமர் நரேந்திர மோடி நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காக நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என என்னிடம் கூறினார். அப்போது நான், இந்த விவகாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது; அதை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி தொடர்பாக பிரதமர் மோடி என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன். இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். மகாராஷ்டிரா முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன்" என கூறியிருந்தார். இதன் மூலம் பாஜக முடிவுக்கு அவர் பச்சைக் கொடி காட்டியிருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த பாஜக தரப்பில் முதலமைச்சர் பதவியேற்பார் எனவும், இரு துணை முதலமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் நாளை சந்திக்கவுள்ளனர். அதற்கு பிறகு முதலமைச்சர் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.. குறிப்பாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் துணை முதலமைச்சர்களாக பதவியேற்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+