மருமகள் செய்த தப்பு.. இருந்தாலும் மாமனாருக்கு இவ்வளவு டென்ஷன் கூடாது.. உறைந்துபோன தானே
மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனாரிடம் விசாரணை நடக்கிறது
மும்பை: மாமனாருக்கு வந்த ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து மருமகளை தாறுமாறாக சுட்டு தள்ளிவிட்டார்.. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மகாராஷ்டிர மாநிலமே அதிர்ந்து போயுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தானேவை அடுத்த ரபோடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாத் பாண்டுரங் பாட்டீல். இவருக்கு 76 வயதாகிறது. இவரது மருமகளுக்கு 42 வயதாகிறது.
வழக்கமாக இவருக்கு காலை டிபன் மற்றும் டீ இரண்டையும் மருமகள் தருவது வழக்கம்.. ஆனால் நேற்று காலை, டிபனுடன் சேர்த்து இவருக்கு டீ தரவில்லையாம்..

மாமனார்
அதனால் மருமகள் மீது மாமனாருக்கு கோபம் வந்துவிட்டது.. உடனே துப்பாக்கியை எடுத்து தன்னுடைய மருமகளை சுட்டு தள்ளிவிட்டார்.. இதில், அந்த பெண்ணின் அடி வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.. இதை பார்த்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்து, மருமகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

துப்பாக்கி சூடு
நடந்த சம்பவம் குறித்து காசிநாத் பாண்டுரங்கின், இன்னொரு மருமகள் போலீசில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில், காசிநாத் பாண்டுரங்கன் மீது ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் 506 (மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை.. காரணம், இந்த துப்பாக்கி சூட்டிற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்...

பெண் சீரியஸ்
இப்போது அந்த மருமகள் சீரியஸாக இருக்கிறாராம்.. டாக்டர்கள் தீவிர சிகிச்சை தந்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீஸ் உயரதிகாரி சொல்லும்போது, "மருமகள் டீயுடன் காலை உணவு கொடுக்காத காரணத்தால் கோபமடைந்த மாமனார், மருமகளை சுட்டதாகத் தெரிகிறது... துப்பாக்கியால் சுட்டதால் 42 வயதான அந்தப் பெண்ணுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது... அதனால் அந்தப் பெண் தானேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்றார்.

அதிர்ச்சி
உணவு வழங்காத காரணத்தினால் மருமகளையும், மகனையும் கத்தியால் தாக்கிய சம்பவம் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்தது.. ஆனால், டிபனில் டீ தராத காரணத்திற்காக, துப்பாக்கியை எடுத்து ஆளையே காலி செய்ய நினைத்த சம்பவம் இப்போதுதான் முதல்முறையாக நடந்துள்ளது.. மகாராஷ்டிரா மாநில மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications