பொண்டாட்டி ரூமில் சிரிப்பு சத்தம்.. பதறி ஓடிய புருஷன்.. கடைசியில் பார்த்தால், ஓ காட்.. இவரல்லவோ மனைவி
கள்ளக்காதலனுக்காக கணவனுக்கு விஷஊசி போட்டு கொலை செய்துவிட்டார் மனைவி
மும்பை: கள்ளக்காதல் பித்து தலைக்கேறிவிட, கடைசியில் தன் கணவரை கோமா நிலைமைக்கே கொண்டுபோய்விட்டு விட்டார் அவரது தர்மபத்தினி..!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் பகுதியை சேர்ந்தவர் கேசவரா தேஷ்முக்... மனைவி பெயர் சுகாசினி... இவர் ஒரு டாக்டர்.. அங்குள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்..

சுகாசினி
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்... டாக்டராக இருந்தாலும், சுகாசினியின் நடத்தை சரியில்லை என்றும், அவருக்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.. இந்த விஷயம் கணவருக்கு அரசல் புரசலாக தெரிந்துவிட, மனைவிமீது எப்போதுமே சந்தேகப்பார்வையை வீசும்படி ஆகிவிட்டது.. இதனால் குடும்பத்தில் நிறைய முறை தகராறு வெடித்துள்ளது.. சில சமயம், திடீரென ஆஸ்பத்திரிக்கும் நேரிலேயே சென்று மனைவியின் நடத்தையை கவனிப்பாராம்..

பாய் பிரண்ட்
அப்படித்தான், சம்பவத்தன்றும் கேசவரா தேஷ்முக், தன் மனைவியை காண அவரது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்... அப்போது மனைவியின் ஆண் நண்பரான அருண் காண்டேகர் என்பவர் மனைவியின் ரூமில் இருந்துள்ளார்.. அவருடன் சிரித்து சிரித்து பேசி கொண்டிருந்தார்.. 2 பேரும் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்த தேஷ்முக்குக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. அதனால், நேரடியாகவே இருவரிடமும் சென்று இதை பற்றி கேட்டுள்ளார்.. அங்கேயே தகராறும் செய்துள்ளார்.

பாத்ரூம்
இதனால் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.. இருந்தாலும் அது ஆஸ்பத்திரி என்பதால், கணவருடன் தனியே பேச வேண்டும் என்று சொல்லி, பக்கத்தில் இருந்த பாத்ரூம் அருகே தேஷ்முக்கை சுகாசினி அழைத்து சென்றுள்ளார்... பின்னாடியே அருணும் சென்றிருக்கிறார்.. தேஷ்முக்குக்கு கள்ளக்காதல் ஜோடி என்னன்னவோ சொல்லி சமாளிக்க பார்த்தது.. ஆனால், தேஷ்முக் ஆத்திரம் குறையாமல் இருந்ததால், அதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று எண்ணிய சுகாசினி, அருணுடன் சேர்ந்து தேஷ்முக்குக்கு விஷ ஊசி செலுத்திவிட்டார்..

கோமா சீரியஸ்
ஊசி போட்டதுமே, தேஷ்முக் கோமா நிலைக்கு போய்விட்டார்.. அதே ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டுவிட, சிகிச்சையும் தரப்பட்டது.. இப்படியே 33 நாட்களுக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. ஆனாலும், 34வது நாளில் கோமாவிலேயே தேஷ்முக் உயிர் பிரிந்துவிட்டது.. அப்பா இறந்ததுமே, கதறி கதறி அழுதுள்ளார் அவரது மகன்.. அப்பா இறந்ததற்கு அம்மாதான் காரணம் என்பதால், நேரடியாக அவரிடம் சண்டைக்கு போயுள்ளார்..

எஸ்கேப்
அதுமட்டுமல்ல, அப்பா இறப்புக்கு காரணம் தன்னுடைய அம்மாதான் என்று போலீசிலும் புகார் அளித்துள்ளார்.. பிறகு இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் விசாரணையை துவங்கினர்.. ஆனால், மகன் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றுவிட்டான் என்று தெரிந்ததுமே, சுகாசினி எஸ்கேப் ஆகிவிட்டார்.. ஆண் நண்பர் அருணும் தலைமறைவாகி விட்டார்.. இப்போது இவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

தனிக்குடித்தனம்
பரிதாபமாக உயிரிழந்த தேஷ்முக் குறித்து மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.. கணவர் தேஷ்முக்குக்கு சுகாசினி இரண்டாவது மனைவியாம்.. முதல் மனைவி இருக்கும்போதே, இரண்டாவதாக சுஹாசினியை திருமணம் செய்துகொண்டார்.. இந்த திருமணம் விஷயம் தெரிந்தும், தம்பதி இருவரும் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வருவதும் முதல் மனைவிக்கு தெரிந்துவிட்டது.. இதனால், கொந்தளித்து போன முதல்மனைவி, தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.. பிறகு போலீசுக்கும் சென்று புகார் தந்துள்ளார்.. அவரை தற்கொலைக்கு தூண்டியதன்பேரில் போலீசாரும், தேஷ்முக்கை கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.. 6 வருடம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.. அவ்வளவையும் சுகாசினி மீதுள்ள பிரியத்தால் பொறுத்து கொண்டாராம் தேஷ்முக்.. இந்த 6 வருட இடைவெளியில்தான், சுஹாசினியின் பாதை மாறியுள்ளதாக சொல்கிறார்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications