மராட்டியத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா.. ஒரே நாளில் 30,000 பேருக்கு பாதிப்பு.. மீண்டும் லாக்டவுன்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் இந்த ஆண்டிலேயே இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் 30,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 30,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.79 ஆக உயர்ந்துள்ளது.

With Over 30,000 Covid Cases, Maharashtra Records Highest Single-Day Rise

அதிகபட்சமாக மும்பையில் 3,775 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல புனேவில் 3,000 பேருக்கும் நாக்பூரில் 2,700 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனிற்றி சுமார் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,399ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 11,314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மராட்டியத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,14, 867 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நந்தே நகரில் 11 நாட்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாக்பூர், புனே பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றாததே வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணம் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதார துறை அமைச்சகம், கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+