மண்டைக்கு ஏறிய கோபம்.. மருமகளை ஒரே போடாக போட்டு கொன்ற மாமியார்.. போலீசில் சரண்!
மருமகளை கொன்ற மாமியார் போலீசில் சரண் அடைந்துள்ளார்
மும்பை: மாமியாருக்கு உச்சக்கட்ட ஆத்திரம் தலைக்கேறிவிட்டது.. என்ன செய்வதென்றே தெரியாமல், இரும்பு பூந்தொட்டியை தூக்கி மருமகள் மண்டையில் ஒரே போடாக போட்டு கொன்றுவிட்டார்!
மகாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரின் மாணிக்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி மனே.. 48 வயதாகிறது.. இவரது மூத்த மகன் ரோகன்.. இவரது மனைவி ரியா.

ரோகன் அமெரிக்காவில் வேலை பார்க்கவும், தம்பதி இருவருமே குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார்கள்.. 6 வருடங்களாக இந்தியா பக்கம் வரவே இல்லை.. இந்நிலையில், ரோகன் - ரியா இருவரும் போன 1-ம் தேதி இந்தியா வந்தனர்.
அமெரிக்காவில் இருந்தாலும் மாமியார் - மருமகள் இடையே சரியான உறவுமுறை இல்லை.. மகனை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டார் என்ற கோபம் ஆனந்திக்கு இருந்து கொண்டே இருந்தது.. 6 வருடம் கழித்து இந்தியா வந்தும், இவர்கள் சண்டை ஆரம்பமானது.
இந்தியா வந்ததில் இருந்தே தினமும் தகராறு நடந்துள்ளது.. இந்நிலையில், தூங்கி எழுந்ததும் ரோகன் காலையில் வாக்கிங் சென்றுவிட்டார்.. இவர்கள் 2 பேரின் சண்டையும் ஆரம்பமானது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆனந்தி, கீழே இருந்த இரும்பு பூந்தொட்டியை எடுத்து வந்து மருமகள் தலையில் போட்டார்.. இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்டி ரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர், ஆனந்தி மாணிக்பூர் ஸ்டேஷனில் போய் சரண் அடைந்துவிட்டார். விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார், ரியா உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். தனது மகனையும், பேரக்குழந்தைகளையும் மருமகள் பிரித்துவிடுவார் என்ற பயம் மாமியாருக்கு இருந்து கொண்டே இருந்ததாக தெரிகிறது.
மருமகளை கொன்றுவிட்ட மாமியார் ஆனந்தி சில தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுவிட்டதாக சொல்லகிறார்கள்.. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது. இந்த கொலை தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications