உலகிலேயே கொடூரமான விஷம்.. கணவர் குடும்பத்தினர் 5 பேரை கொன்ற பெண் விஞ்ஞானி.. சிக்கியது எப்படி?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே கட்சிரோலியின் மஹாகாவ் கிராமத்தில் ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் அடைந்தனர். இந்த மரணம் தொடர்பாக நடந்த விசாரணையில், அந்த வீட்டின் மருமகள் மிகவும் கொடிய விஷமான தாலியத்தைப் பயன்படுத்தி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் 'விஷத்திற்கே விஷம்' என்று அழைக்கப்படுவது தாலியம் தான். நிறம், மணம், சுவை என எதுவும் இல்லாதது ஆகும். இந்த தாலியம் - தொட்டால் நச்சுத்தன்மையுடையது ஆகும். இந்த தாலியத்தை பயன்படுத்திதான் சங்கர் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாலியத்தால் பாதிக்கப்படட சங்கரின் மகள், மகன் (சங்கமித்ராவின் கணவர்) ஓட்டுநர் மற்றும் உறவினர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களில் வீடு திரும்பி உள்ளனர்.

ஆனால் வீடு திரும்பிய சில நாளில் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு சங்கமித்ராவின் கணவர் உள்பட மூன்று பேரும் இறந்தனர். செப்டம்பர் 20 மற்றும் அக்டோபர் 10க்குள் அடுத்தடுத்து ஐந்து பேர் ஒரே குடும்பத்தில் இறந்ததால் கட்சிரோலியின் மஹாகாவ் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.
ஐந்து பேர் தாலியத்தால் இறந்தது கிராமத்தில் இருக்கும் யாருக்குமே தெரியாது.. மர்ம மரணம் என்று கிராமத்தில் பீதி நிலவியது. ஐந்துபேரும் பில்லி சூனியம் வைத்து இறந்துவிட்டதாக கிராமத்தில் தீவிரமாக வதந்தி பரவியது. இந்த சூழலில் தான் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அந்த குடும்பத்தில் உயிரோடு இருந்த சங்கரின் மருமகளான விவசாய விஞ்ஞானியான சங்கமித்ரா (22)விடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். விசாரணையில் எந்த உண்மையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனில் விஷம் குறித்து அவர் தேடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்து அவரை விசாரித்த போது தான் உண்மை வெளியே வந்தது.
சங்கமித்ராவின் தந்தை அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தையின் சாவிற்கு தனது கணவர், மாமியார்,மாமனார் தான் காரணம் என்பதால் அவர்களை பழி வாங்க சங்கமித்ரா முடிவு செய்தார். அதற்காக மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்வதற்காக விஷத்தை தேடி இருக்கிறார். ஊமத்தங்காய் தான் கூகுளில் வந்திருக்கிறது. அதை கலந்தால் உணவில் நிறம் சுவை தெரியும் என்பதால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்தவர், தனது தோழி ரோஜா என்பவருடன் கூட்டு சேர்ந்து தெலுங்கானா சென்று தாலியத்தை வாங்கி உள்ளார்.
இது விஷத்திற்கே விஷம் என்று சொல்லப்படும் பொருள் ஆகும். இது மெல்ல மெல்ல கலந்து சாப்பிட்டால் உயிரையே கண்டிப்பாக பறித்துவிடும், ஆனால் எப்படி இறந்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிவும் கடினம் . இதனால் அதனை சங்கமித்ரா உணவில் கலந்து கொடுத்துள்ளார். சங்கமித்ரா எதிர்பார்த்தபடியே தனது கணவர் மற்றும் மாமனார் சங்கர் மற்றும் மாமியார் அடுத்தடுத்து இறந்தனர். அதன்பின்னர் உறவினர்களும் இறந்தனர்,கிட்டத்தட்ட ஐந்து பேர் இறந்து போனார்கள்.
தனது தந்தையின் சாவுக்கு காரணமான கணவரின் குடும்பத்தை பழிவாங்க இப்படி செய்ததாகவும், வலி மிகுந்த மரணத்தை கணவர் குடும்பம் அடைய வேண்டும் என இப்படி செய்ததாக விஞ்ஞானி சங்கமித்ரா கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சங்கமித்ராவையும் அவருக்கு உதவிய ரோஜாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications