நைட்டி அணிந்த மஞ்சுளா.. "இதை ஏன் போட்டாய்? சேலை எங்கே".. கோபக்கார கணவரை நொடியில் தூக்கிய போலீஸ்
மைசூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், நைட்டி அணிந்ததை காரணம் காட்டி, கணவன் தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.. சாதாரண தகராறாகத் தொடங்கி, கொடூரமான கொலை முயற்சியாக முடிந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுதொடர்பான விசாரணையை போலீசார் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
பெலகாவி மாவட்டம் கானாப்பூர் தாலுகாவிற்கு உட்பட்டது நந்தகட் என்ற கிராமம்.. இங்குள்ள துர்கா நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணாஜி பரசுராம் பாட்டீல் (29).. இவருக்கும் மஞ்சுளா (27) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.

நைட்டி அணிந்த மஞ்சுளா
இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்தே அமைதியாக அமையவில்லை.. மஞ்சுளா தொடர்ந்து தனது கணவரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார்.. இது ஏதோ ஒரு நாளில் நடந்த தற்செயலான மோதலும் கிடையாது.. கணவரின் கட்டுப்பாட்டுக்குள் அடைபட்டு கிடந்த மஞ்சுளா, தினம் தினம் அவரது டார்ச்சரில் தவித்து வந்தார்.. இந்நிலையில்தான், கணவரின் அதிகாரப் போக்கின் ஒரு உச்சகட்டமே இப்படியொரு தாக்குதல் நடந்துள்ளது..
சம்பவத்தன்று காலை சுமார் 11 மணியளவில் மறுபடியும் தம்பதி இருவருக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது.. தன்னுடைய வீட்டில் இருந்தபோது, மஞ்சுளா புடவைக்கு பதிலாக நைட்டி அணிந்திருந்தாராம்.. இதற்கு கணவர் கிருஷ்ணாஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..
கணவரின் சித்ரவதை
"ஏன் புடவை அணியாமல் நைட்டி அணிந்திருக்கிறாய்?" என்று கேட்டு அவர் ஆத்திரமடைந்துள்ளார்.. கோபம் முற்றிய நிலையில், வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை மஞ்சுளா மீது ஊற்றி கிருஷ்ணாஜி தீ வைத்துள்ளார்..
மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அங்கு அவருக்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.. இதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக, கோவா மாநிலம் பாம்போலிம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்..
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மஞ்சுளா தீவிர சிகிச்சை பிரிவில் மரணப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். தீயில் கருகி கிடக்கும் மகளை கண்டு கதறிய பாதிக்கப்பட்ட மஞ்சுளாவின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்..
உயிரோடு எரிக்க முயற்சி
உடனடியாக இதுகுறித்து புகாரும் தந்தார்.. அவர் அளித்த புகாரின் அடிப்படையில், நந்தகட் போலீசார் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.. குறிப்பாக, மனைவியை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதற்காக வழக்கு பதியப்பட்டது.. ஆனால் அதற்குள் கணவர் எகிறி தப்பி ஓடிவிட்டார்.
பிறகு இந்த சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தலைமறைவான கிருஷ்ணாஜியை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது..
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஏப்ரல் 20-ம் தேதி நந்தகட் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த கிருஷ்ணாஜியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. விசாரணையில் அவர் தனது கொடூரச் செயலை ஒப்புக்கொண்டார்.. இதனைத் தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.. சாதாரண ஆடை விஷயத்திற்காக மனைவியின் உயிரைப் பறிக்க முயன்ற இந்தத் தாக்குதல், குடும்ப வன்முறையின் கொடூர முகத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications