திமுகவில் இணையும் காளியம்மாள்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் மேடையை பகிரும் நாதக நிர்வாகி!
நாகை: தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் மேடையை நாதகவின் காளியம்மாள் பகிர்ந்து கொள்ளவிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக காளியம்மாள் திமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 8 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகள் கிடைத்து மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால் தேர்தலுக்கு பின் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாடுகள் மீது அக்கட்சி நிர்வாகிகளுக்கே அதிருப்தி ஏற்பட்டது. நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் குருமூர்த்தி உள்ளிட்டோரை சந்தித்தார். அதுமட்டுமல்லாமல் பெரியாரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.

இதனிடையே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏராளமான முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகினர். அதேபோல் நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளை சீமான் கொசுறு என்று பேசிய ஆடியோ லீக்கானது. இந்த ஆடியோ தொடர்பாக சீமான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே காளியம்மாள் நாதக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அமைதி காத்து வந்தார். இதனிடையே அவர் விஜய் கட்சி தொடங்கிய போது, தவெகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடில் நடக்கவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் காளியம்மாள் பங்கேற்கவுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் காளியம்மாள் பெயருக்கு கீழ் நாதக பொறுப்பு போடப்படாமல், சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காளியம்மாள் நாதகவில் இருந்து விலகிவிட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக காளியம்மாள் பேசுகையில், நாதகவில் இருந்து விலகுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
அதேபோல் காளியம்மாள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ள நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், திமுகவின் ரவீந்திரன், ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் காளியம்மாள் பங்கேற்று பேசவிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சி மணப்பாடில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான வினோஜிலின் சித்தா என்பவரின் முதல் திருவிருந்து விழாவாகும். இதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நெல்லை மாவட்ட நீதிபதி, எழுத்தாளர்கள், முக்கிய புள்ளிகள் பங்கேற்கின்றனர். சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணைவதாக தகவல் வெளியாகியது.
அதனை காளியம்மாள் மறுத்த நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். இதனால் விரைவில் காளியம்மாள் திமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் நாதகவில் இருந்து விலகினாலும், சில நாட்கள் சமூக செயற்பாட்டாளராக செயல்பட காளியம்மாள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாதக சார்பாக போட்டியிட்ட காளியம்மாள் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை வாங்கி இருந்தார். அதேபோல் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீனவ குடும்பத்தைச் சேர்ந்த இவர், நாகை மாவட்டத்தில் நாதகவின் முக்கிய புள்ளியாக இருந்தவர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications