எடப்பாடி பேச்சை மீறிய ஈபிஎஸ் டீம் மாஜி..? ஜெயலலிதாவுக்கு இன்றே திதி கொடுத்த ஓஎஸ் மணியன்! பரபர!
நாகப்பட்டினம் : எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்.எல்.ஏவுமான ஓ.எஸ்.மணியன், இன்றே (டிசம்பர் 4) ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்து, நினைவு நாளை அனுசரித்தார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வேதாரண்யத்தில் கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து பிண்டத்தை கடலில் கரைத்து திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் ஓ.எஸ்.மணியன்.
எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், அவரது அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி, இன்றே ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திதி கொடுத்த ஈபிஎஸ் அணி மாஜி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் திதி கொடுத்தார். சன்னதி கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து பின்பு பிண்டத்தை கடலில் கரைத்து புனித நீராடினார்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி
பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது திருமருகல் வடக்கு அதிமுக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான ராதாகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர்கள் கிரிதரன் சுப்பையன், தங்க. சௌரிராஜன் அவை.பாலசுப்ரமணியன், நகர செயலாளர் நமச்சிவாயம், ஒன்றிய குழுத் தலைவர் கமலா அன்பழகன் நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா இறப்பு மர்மம்
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை ஜெயலலிதா இறந்த நாள் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தியது. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 - 3.50 மணியளவில் ஜெயலலிதா இறந்ததாக சாட்சியங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக, ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு டிசம்பர் 4ஆம் தேதி 3.50 மணிக்கு ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக் திதி கொடுத்ததை அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஈபிஎஸ் - ஓபிஎஸ்
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை அனுசரிப்பதில் அதிமுகவினரிடையே குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை புறந்தள்ளிவிட்டு வழக்கம்போல டிசம்பர் 5ஆம் தேதியையே ஜெயலலிதா நினைவு நாளாக அனுசரிக்க உள்ளனர். மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று தனித்தனியாக அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இன்றே நினைவு தினம்
ஆனால், ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, டிசம்பர் 4ஆம் தேதியான இன்றே ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்துள்ளார். கே.சி.பழனிச்சாமி ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கே.சி.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்று தெரிவித்ததோடு ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸும் இதனையே பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதிமுகவில் சலசலப்பு
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்றே ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 5 தான் ஜெயலலிதா நினைவு நாள் எனக் குறிப்பிட்டு அதையொட்டி அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என ஈபிஎஸ் அறிவித்துள்ள நிலையில், அவரது அணியைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன் இன்றே தர்ப்பணம் கொடுத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை ஏற்றுக் கொள்கிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications