அணை கட்டினா ஆறு செத்துடும்.. சீமான்.. திண்டுக்கல்லில் அணை கட்டுவேன்.. இது மன்சூர் அலிகான்!
நாகப்பட்டினம்: ஆற்றின் குறுக்கே அணை வேண்டுமா? வேண்டாமா என்பதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அந்த கட்சியின் திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் இடையே சுவாரஸ்ய முரண் ஏற்பட்டுள்ளது.
நாகையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "என் கையில் ஓடிக்கொண்டிருக்கும் நரம்பில் ஒரு ஸ்ட்ரோக் வந்தால் கை செயல் இழந்து விழுந்துவிடும். அதுபோல் ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அடுத்த பகுதியில் இருக்கும் ஆறு செத்துவிடும். பூமி செத்துவிடும் என்கிறார்கள்.

எனவே இந்த உயிரியல் உண்மையை நான் புரிந்து கொள்ள வேண்டும். தண்ணீரை அணை கட்டாமல் ஓட விடுங்கள். அதன் போக்கிலே ஓட விட்டு திருப்பிக் கொள், 5 ஆயிரம் ஏக்கர் ஏரியா அங்கே தேக்கிக்கொள், 2 ஆயிரம் ஏரியாக இங்கே தேக்கிக்கொள், குளம், குட்டை, கண்மாய் என அதன் போக்கில் ஓட விடுங்கள். பூமி முழுவதும் நீரை ஓட விட்டால் தான் நிலத்தடி நீர் எல்லா பகுதிக்கும் சமமாக உயரும்" இவ்வாறு கூறினார்.
இதனிடையே திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் பேசுகையில், "செந்துறையில் கடல்சார் விஞ்ஞானி பாலு இருக்காரு. அவர் திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். அங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய அணை கட்ட திட்டம் கொடுத்துள்ளார். வெறும் ரூ.10 கோடியில் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்ய செந்துறையில் அணை கட்ட முடியும். அதை கட்டுவேன்.
திண்டுக்கல் பகுதியில் உள்ள ஆறுகளை இணைந்து தூர்வாருவேன். 40 ஆண்டுகளாக தூர்வாராமல் பல அணைகள் இங்கு உள்ளது. அவற்றை மக்களை பயன்படுத்தி தூர் வாருவேன். இதன் மூலம் காண்ராக்ட் மற்றும் டெண்டர் சிஸ்டத்தை ஒழித்து விடுவேன்" என்றார். சீமான் அணை வேண்டாம் என்க, மன்சூர் அலிகான் அணை வேண்டும் என்று கூற சுவாரஸ்யமான முரணாக இது மாறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications