நாகை மீனவர்கள் 6 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணைக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றுள்ளது.
இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், தாக்குவதும், அவர்களது வலைகளை கிழிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் என பல ஆண்டுகளாக அராஜகம் செய்தது இலங்கை கடற்படை.

அந்த வகையில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகுகள் மற்றும் 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25 -ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். மீதம் உள்ள மீனவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கொழும்புவில் இருந்து, 47 மீனவர்களும் நேற்று விமானம் மூலம் புறப்பட்டு காலை 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்திறங்கினர். அங்கிருந்து ராமேசுவரம் மீனவர்கள் 37 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேரும் மீன்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இலங்கை சிறையில் இன்னும் நாகை மற்றும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 44 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி நம்புதலையை சேர்ந்த நாகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்றது. அவர்களை மார்ச் 4 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: ஆறுமுகம் மனோஜ்குமார் (26), சுப்பையா முத்துக்குமார் (34), தொசண்டிமுத்தன் கம்மான்கரையான் (60), சக்கத்து ராஜபூபதி (34), மாணிக்கவேல் ரங்கதுரை (48), காளி பாலு (45) ஆகிய 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications