“கொள்கையும் கிடையாது.. கோட்பாடும் கிடையாது.. பேரு மட்டும் இந்தியா கூட்டணியாம்!” சீமான் தாக்கு
நாகப்பட்டினம்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொண்ட சீமான், இந்தியா கூட்டணி மீது சரமாரி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் 39 தொகுதிகளும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே, வேட்பாளர்கள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட சீமான் இந்தியா கூட்டணி குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார். நாகை லோக்சபா தொகுதி நன்னிலம், திருவாரூர், நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இந்த தொகுதி இருக்கிறது.
இந்த முறையும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் திமுக தலைமையில் களமிறங்கியுள்ளது. சிபிஐ வேட்பாளராக வி.செல்வராஜ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கரும், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று நாகையில் வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சீமான், “கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் இல்லாததுதான் இந்தியா கூட்டணி. கேரளாவுக்குள் எதிர்க்கட்சி கேரளாவுக்கு வெளியே கூட்டணி. கர்நாடகாவில் இருந்து நீரை பெற்று தர முடியவில்லை; அப்புறம் எதற்கு இந்தியா கூட்டணி? மொத்தத்தில் இந்தியா கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? நாட்டையும் காப்பாற்ற போகிறோம் என இந்தியா கூட்டணி ஏமாற்றுகிறது.
இயற்கை வளங்கள் இஷ்டத்திற்கு சுரண்டப்பட்டிருக்கிறது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து 39 எம்பிக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினோமே, திமுக நமக்கு என்ன செய்தது? நமது வளத்தை அழிக்கும் மீத்தேன், ஈத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததே அவர்கள்தான். இது குறித்து அவர்கள் பெருமையாக பேசியிருக்கிறார்கள். இதை எதிர்த்து மக்கள் போராடிய பின்னர், தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டோம் என்று மழுப்பினார்கள்” என்று திமுக மற்றும் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாதக வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை அடுக்கியிருந்தார். குறிப்பாக அவரை ஒருமையில் பேசியருந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications