‘நான் தனி ஆள் இல்லை சார்’ - அஜித் பன்ச் டயலாக் மூலம் ஸ்டாலினுக்கு பதிலளித்த விஜய்
நாகப்பட்டினம்: தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் மக்களை சந்தித்து வருகிறார். கடந்த வாரம் அவர் திருச்சி, அரியலூர் மாவட்டம் சென்றிருந்தார். இன்று அவர் நாகை சென்றுள்ளார். தவெக விஜய் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்தக் கட்சியினர் புகார் தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் திமுக உள்ளிட்ட கட்சிகள் விஜய்யின் போட்டியாளரான அஜித் உள்ளிட்டோரின் ரசிகர்களை தவெகவுக்கு எதிராக திருப்பி விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அஜித்தின் பன்ச் டயலாக் சொல்லி விஜய் பதில் அளித்துள்ளார்.
சொத்தை காரணம்
நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், நான் போகற இடத்திற்கு எல்லாம் அனுமதி கொடுக்கறதில்ல. மக்களை சந்திக்க எத்தனை கட்டுப்பாடு. அதற்கான காரணம் சொத்தையாக உள்ளது. 5 நிமிடம் தான் பேசணும், 10 நிமிடம் பேசணும் என்கிறார்கள். நான் பேசுவதே 3 நிமிடம் தான். அதிலும் அது கூடாது, இது கூடாது என்றால் எதைத்தான்யா பேசுவது. மக்களை பார்த்து கைக் காட்ட கூடாது, சிரிக்கக் கூடாது, பஸ்க்குள்ளயே இருக்கணும்னு சொல்றாங்க.

மோடி ஜி வந்தா பவர்கட்
நான் தெரியாம தான் கேட்கிறேன். கடந்த வாரம் திருச்சி, அரியலூர் மாவட்டம் சென்றிருந்தேன். திருச்சியில் ஸ்பீக்கருக்கு செல்லும் ஒயர் கட் ஆனது. அரியலூரில் மின்சாரம் கட் ஆனது. நான் கேட்கிறேன். இதுவே ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரும்போது நிபந்தனைகள் போடுவீங்க, பவர் கட் செய்வீங்க. பிரதமர் மோடி ஜி, உள்துறை அமைச்சர் வரும்போது கட் செய்வீர்களா சிஎம் சார். கட் செய்துதான் பாருங்கள். உங்க பேஸ்மட்டமே அதிரும்ல. நீங்க தான் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே.
செம காமெடி
நான் என்னவோ ஏதோ என நினைத்தேன். செம காமெடியாக உள்ளது. நேரடியாக கேட்கிறேன் என்ன சிஎம் சார் மிரட்டி பார்க்கறீங்களா. அதுக்கு நான் ஆள் இல்லை. இந்த விஜய் ஆள் இல்லை. உங்களால் என்ன செய்து விட முடியும். பெயரளவுக்கு கொள்கையை வைத்து குடும்பத்திற்காக கொள்ளையடிக்கும் உங்களுக்கு அவ்வளவு இருந்தால், சுயமாக சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்.
உங்கள் எண்ணம் என்ன..
மக்கள் நிம்மதியாக பார்க்க ஒரு இடத்திற்கு தானே அனுமதி கேட்கிறேன். அதை விட்டு மக்கள் நெருக்கடி உள்ள இடங்களுக்கு அனுமதி கொடுக்கிறீர்கள். என்ன தான் உங்கள் எண்ணம். நான் மக்களை சந்திக்க கூடாது. அரசியலை கடந்து என் சொந்தங்களை நான் பார்க்க போனால் அப்போதும் தடுப்பீர்களா. இந்த அடக்குமுறை எல்லாம் வேண்டாம் சார். நான் தனி ஆள் இல்லை மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி சார்.
தவெக-திமுகவுக்குதான் போட்டி
இந்த பூச்சாண்டி காட்டும் வேலையை எல்லாம் விட்டு, தில்லாக தைரியமாக தேர்தலை சந்திக்க வாங்க சார். பார்த்துக்கலாம். இனிமேலும் தடை போட்டால் நான் மக்களிடமே அனுமதி கேட்பேன். மக்களே உங்களை நான் சந்திக்க கூடாதா. உங்கள் குறைகளை கேட்க கூடாதா. 2026 தேர்தலில் தவெக - திமுக இடையே தான் போட்டி. என்று கூறினார்.
விஜய் - அஜித்
சினிமாவில் விஜய் - அஜித் போட்டியாளர்களாக உள்ளனர். சமூகவலைதளங்களிலும், நேரடியாகவும் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் சண்டை போடுவது மிகவும் சாதாரணம். விஜய்யை எதிர்ப்பதற்காக திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் அஜித் பெயரை பயன்படுத்தி வருகிறார்கள். அஜித்திற்கு இதை விட அதிகம் கூட்டம் வரும். அவர் தன் ரசிகர்களை சுய நலத்திற்காக பயன்படுத்த மாட்டார் என்று கூறி வருகிறார்கள்.
அஜித்தின் பன்ச் டயாலக்
சமூகவலைதளங்களிலும் அஜித், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று கருத்து பரவி வருகிறது. அஜித் ரசிகர்களிடம் ரீச் ஆவதற்காகவே அஜித்தின் பிரபல பன்ச் டயலாக்கான, நான் தனி ஆள் இல்லை என்று பேசியதாக கூறப்படுகிறது. விஜய்யின் இந்த பஞ்ச் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது."என்றார்.












Click it and Unblock the Notifications