"முதுகு வலிக்குதும்மா".. அழுது துடித்த இளைஞர்.. காசு இல்லாமல் தவித்த பெற்றோர்.. விபரீத சம்பவம்!
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
நாகை: "ம்மா.. முதுகு ரொம்ப வலிக்குது.. என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க" என்று அழுதுள்ளார் ஒரு இளைஞர்.. ட்ரீட்மென்ட்டுக்கு அவ்வளவு காசு இல்லையே என்று பெற்றோர் சொல்லவும், வலி தாங்காமல் விஷத்தை குடித்து தற்கொலையே செய்து கொண்டார்.
நாகையை அடுத்த நாகூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன்.. 21 வயதாகிறது.. இவர் ஒரு பட்டதாரி.. கடந்த வருடம் இவருக்கு சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டது.. இதற்கு பிறகு மாச மாசம் செக்கப்புக்கு வந்து, சிகிச்சையும் பெற்று கொள்ளுமாறு டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.

அதன்படியே முருகனும் சென்னைக்கு வந்து சென்றுள்ளார்.. இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டனர்.. அதனால் சில மாதங்களாகவே முருகனால் சென்னைக்கு வர முடியவில்லை.. மேலும், பஸ், ரெயில் என எல்லா போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் முருகனால் சென்னை வரவே முடியாத சூழல் ஏற்பட்டது.
முறையான சிகிச்சையை எடுத்து கொள்ள முடியாததால் முருகனுக்கு மறுபடியும் முதுகில் வலி வந்துவிட்டது.. பொறுக்க முடியாத வலி ஏற்பட்டதால், தன்னுடைய பெற்றோரிடம் ட்ரீட்மென்ட்டுக்காக சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் குடும்பமோ வறுமையில் சிக்கி கொண்டுள்ளது.. அதனால் போதுமான அளவுக்கு பணம் இல்லை என்று பெற்றோர் சொல்லி உள்ளதாக தெரிகிறது.. இதனால் முதுகு வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட முருகன் வீட்டில் இருந்த விஷத்தை அதாவது பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தும், பலனின்றி முருகன் இறந்துவிட்டார்.
மருத்துவ சிகிச்சைக்கு செல்ல பணம் இல்லாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. நாகூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.. இன்னும், இந்த கொரோனா என்னென்ன பாடுபடுத்த போகிறதோ!?
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications